சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமீன் மற்றும் அதன் பயன்கள் என்ன? என்பதனை பற்றி இதில் பார்போம்.
பொதுவாகவே நாம் இப்பொழுதெல்லாம் அதிகாலை வெயிலில் நேரத்தை செலவிட தவருகிறோம்.
ஆகையால், நம் உடலுக்கு தினமும் கிடைக்க வேண்டிய வைட்டமீன்களை நாம் வெகுவாக இழந்து வருகிறோம்.
சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமீன் பற்றி சிலருக்கு தெரியாமல் கூட இருக்கலாம். ஆனால், பலருக்கு இதை பற்றி நன்கு தெரிந்து இருக்கும்.
இருப்பினும் அவர்களால் தினமும் அதிகாலை ஒளிரும் சூரிய ஒளியில் தங்களது நேரத்தை பணி சுமை காரணமாக செலவிட முடியால் இருக்கலாம்.
இருப்பினும் சூரிய ஒளி நம் உடலுக்கு கிடைக்க வேண்டுமானால் தினசரி அதற்கான நேரத்தை சிறிது ஒதுக்கி ஆக வேண்டும்.
ஏனென்றால் உடலுக்கு பல வகையில் நன்மை தரும் வைட்டமீன் டி சூரிய ஒளியின் மூலம் நமக்கு தாராளமாக கிடைக்க கூடியது.
குறிப்பாக, சூரிய ஒளியின் நன்மைகள் பற்றி நம் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும். அதனால் தான் அவர்கள் குழந்தைகளை சூரிய ஒளியில் படும்படி குளிக்க வைக்கின்றனர்.
காரணம், அதிகாலை சூரிய ஒளி நமது உடலுக்கு மிக முக்கிய தேவையான ‘வைட்டமீன் டி’ நமக்கு கிடைக்கிறது.
வைட்டமீன் டி குறைபாட்டால் நம் உடல் தினம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இதற்க்கு காரணம் நாம் நம் உடலின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்தாமல் இருப்பது தான்.
சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமீன்,பயன்கள் என்ன?
இவை நாம் உண்ணும் உணவில் ஓர் அளவு கிடைக்க பெற்றாலும் சூரிய ஒளியினாலே நமது உடலுக்கு தேவையான வைட்டமீன் டி போதுமான அளவுகிடைக்க பெறுகிறது.
சூரிய ஒளி பூமியை அடைய எடுத்து காலம் 8.3 நிமிடங்கள் ஆகும். தினமும் நாம் அதிகாலையில் சூரிய ஒளியில் 15 முதல் 30 நிமிடங்கள் நேரத்தை செலவிடுவதன் மூலம் உடல் புத்துணர்ச்சி பெறுவதுடன், மனசோர்வு, உடல் சோர்வு ஆகியவற்றிலிருந்து நமக்கு தீர்வு கிடைக்கிறது.
அது மட்டுமின்றி, காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது உடலில் தேவையற்ற நீரை வேர்வையாக வெளியேற்றி உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் உடல் எடை குறைகிறது
உடல் எடையை குறைப்பதற்கு இது ஒரு சிறந்த வழி முறையாகும் மருத்துவர்களும் இதையே பெரும்பாலும் அறிவுறுத்துகின்றனர்.
அதிகாலையில் பறவைகள், விலங்குகள், பூச்சிகள் என அனைத்து வகையான வனஉயிரினங்கள் அதிகாலை சூரிய ஒளியில் தங்களுக்கு தேவையான உணவை தேடுவதில் பரபரப்பாக காணபடும்.
பின்னர், அவைகள் விடியற்காலையில் தன் குட்டிகளுக்கும் தங்களது பழக்க வழக்கங்களை கற்றுகொடுத்து விளையாட வைத்து பயிற்சி தரும், பிறகு தங்களுக்குகான உணவை தேடும் பணியில் ஈடுபடும் அவைகளிடம் நாம் இன்னும் கற்றுகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது..
வெருமென நாம் வெயிலில் நேரத்தை செலவிடுவதை விட அதிகாலையில் சிறிதுதளவு உடல் பயிற்சி அல்லது யோக பயிற்சி, நடைபயிற்சி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றினை செய்வதின் மூலம் உடல் பலம் பெறுவதுடன் புத்துணர்ச்சியும் பெறுகின்றது..
இதனால் நாம் தினமும் மேற்கொள்ளும் பணிகளை சிறப்பாக செய்திட வழி வகுக்கும். நம் வீட்டு குழந்தைகளை அதிகாலை இளம் வெயிலில் பழக கற்று கொடுப்போம்! இயற்க்கையான வாழ்க்கை முறையில் நாமும் வரும் அடுத்த தலைமுறையும் வாழ பழகுவோம்…