Last Updated on July 30, 2021 by Dinesh
நாளை முதல் புதிய ஊரடங்கு கட்டுபாட்டு விதிமுறைகள் அமலுக்கு வருகிறது அவைகள் என்னவென்று இதில் பார்போம்…
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வீச தொடங்கியது. இது கடந்த முறை பரவிய கொரோனாவை விட சற்று வேகமாகவே பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு முன்பை விட அதிகமாக உயர்ந்து வருகிறது.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை குறிப்பாக மகராஷ்ட்ரிஷா, டெல்லி, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு என சில மாநிலங்களில் அதிகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மக்கள் கடும் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
பரவி வரும் கொரோனா இரண்டாம் அலையை கட்டுபடுத்த இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றனர்..
இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் கட்டுபாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியது தமிழக அரசு.
இருப்பினும், கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதற்க்கு முன் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 1000 முதல் 2000 வரை கொரோனா தொற்றல் பாதிக்கபட்டிருந்தனர். அந்த அளவுக்கு கரோனாவின் வீரியம் தமிழ்நாட்டில் குறைந்து காணபட்டது..
ஆனால், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகம் எடுக்க தொடங்கிய பிறகு கொரோனாவால் பாதிப்படைவோர் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்தது. இவை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் முதன் முறையாக இருவதாயிரத்தை கடந்தது
அதில் நேற்றைய தினம் மட்டும் தமிழகத்தில் 21,000 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கபட்டனர். 143 பேர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக சுகாதார துறை தெரிவித்தது..
இதனை தொடர்ந்து தமிழகத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வார தமிழக அரசு சார்பில் நாளை முதல் புதிய கட்டுபாட்டு விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது..
புதிய ஊரடங்கு கட்டுபாடுகள்
நாளை முதல் புதிய ஊரடங்கு கட்டுபாடுகள் அமலாகிறது
- ஏற்கனவே சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இறைச்சி கடைகள் இயங்க தடை செய்யபட்டது தொடர்ந்து அமலில் இருக்கும். இதர நாட்களில் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை செயல்பட அனுமதி
- கலாச்சார நிகழ்வுகள், உள் அரங்கங்ககள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் இதர விழாக்களுக்கு தடை செய்யபடுகிறது.
- ஏற்கனவே இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 25 பேர் வரை அனுமதிக்கபட்ட நிலையில் தற்போது 20 பேர் வரை மட்டும் அனுமதி
- அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் 50 சதவீதம் பணியாளர்களை கொண்டு இயங்கலாம்
- பயணியர் இரயில், மெட்ரோ இரயில், தனியார் பேருந்து, அரசு பேருந்து, வாடகை டாக்ஸி போன்றவைகளில் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டும் பொது மக்கள் பயணிக்கலாம்
- 3000 சதுர அடி கொண்ட மற்றும் அதற்கு மேற்பட்ட பெரிய கடைகள் வணிக வளாகங்கள் ஏற்கனவே இயங்க தடை செய்யபட்டுள்ளது. அதில் தற்போது இயங்கும் பலசர கடைகள், காய்கறி கடைகள் இயங்க தடை, இவை தவிர தனியாக இயங்கும் காய்கறி கடைகள், மளிகை, பலசருக்கு கடைகள் குளிர்சாதனம் வசதி இன்றி பகல் 12மணி வரை இயங்கலாம்
- இவற்றில் ஒரு சமயத்தில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதி,
- மளிகைம பலசருக்கு, காய்கறி கடைகள் தவிர பிற கடைகள் திறக்க தடை செய்யபடுகிறது
- மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய பணிகள் செயல் பட எந்த தடையும் இல்லை அவைகள் வழக்கம் போல் செயல்படலாம்
- அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதி
- தேநீர் கடைகள் பகல் 12மணி வரை செயல் பட அனுமதி, உட்கார்ந்து சாப்பிட அனுமதி இல்லை
- விடுதிகளில் தங்கியுள்ளவர்களுக்கு அவர்கள் அறைகளுக்குள்ளே உணவு வழங்க வேண்டும் உணவு கூடங்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி இல்லை
என பல்வேறு கட்டுபாட்டு விதிமுறைகளை தமிழக அரசு சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது. விதிமுறைகளை பின்பற்றி கொரோனாவில்இருந்து நம்மை பாதுகாத்து கொள்வோம்…