Last Updated on May 18, 2021 by Dinesh
மரக்கறி குழம்பு சாப்பிட்டு இருக்கீங்களா ? இல்லையென்றால் இதில் அதனை எப்படி செய்வது என்பதினை பற்றி பார்போம்…
தினமும் நாம் உண்ணும் அன்றாட உணவில் குழம்பு தவிர்க்க முடியாத ஒன்று. அதில் நாம் காய்கறிகளை சேர்த்து உண்ணும் பொழுது உடலுக்கு பல வகைகளில் நன்மைகளை நமக்கு தருகிறது.
காய்கறி வகைகள் பலவற்றை இருக்கின்றது அவை நாம் சில காய்கறிகளை சமைக்காமல் பச்சையாகவே சாப்பிடலாம். சில காய்கறி வகைகளை பொறுத்த வரை சமைத்து தான் சாப்பிட முடியும்.
காய்கறிகள் தான் நம் உடலுக்கு தேவையான வைட்டமீன், ஊட்டசத்துகள், நீர்சத்துகள், நார்சத்துகள், நோய் எதிர்ப்பு சக்தி திறனை மேம்படுத்துதல் போன்ற நன்மைகளை நமக்கு முற்றிலும் தரவல்லது.
காய்கறி இல்லா குழம்புகள் என்பதை விட தினமும் நாம் எதேனும் ஒரு வகை காய்கறியினை சேர்த்து கொள்வதின் மூலம் உடலின் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ள முடியும்.. சரி, இப்போ நாம் மரக்கறி குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்..
மரக்கறி குழம்பு சாப்பிட்டு இருக்கீங்களா?… செய்வது எப்படி…
மரக்கறி குழம்பு என்பது வேறொன்றுமில்லை 5 வகை காய்கறிகளை கொண்டு சமைப்பது தான் மரக்கறி கொழம்பு. இதனை செய்வதற்க்கு தேவையான பொருட்கள் கீழ்வருமாறு:
மரக்கறி குழம்பு சமைக்க தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – மூன்று ஸ்பூன்,
வெந்தயம் – 1/4 ஸ்பூன், வெந்தயம் பயன்கள் உடல் சூட்டை தணிக்க கூடியது, வெந்தய நீர் பயன்கள் உடலுக்கு குளிர்ச்சியை தர கூடியது.
கடுகு – ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும்.
சீரகம் – 1/2 ஸ்பூன், சீரகம் பயன்கள் உடலுக்கு பல வகைகளில் நன்மைகளை தருகிறது. உதனை உணவில் சேர்த்து சாப்பிடும் பொழுது உடலை சீராக வைத்து கொள்ள உதவுகிறது.
வெங்காயம் – 1ஐ எடுத்து நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.
சின்ன வெங்காயம் – 15ஐ எடுத்து கொள்ளவும்.
கருவேப்பிள்ளை – 3 கொத்துக்கள், பச்சை மிளகாய் – 2
காய்கள் – முருங்கைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, பீன்ஸ்
தக்காளி – 5, தேங்காய் – 5 அல்லது 6 துண்டுகள்(1 மூடி தேங்காயில் முக்கால் பங்கு)
முந்திரி – 10 பீஸ், பூண்டு – 10 லிருந்து 15 வரை பீஸ்
பெருங்காயம் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லி – 1 கைபிடி அளவு.
வெறும் மிளகாய்தூள் – 1/12 காரம் அதிகமாக தேவைப்பட்டால் 2ஸ்பூன் சேர்த்து கொள்ளலாம். மேலும், சாம்பார் பொடி – 1ஸ்பூன், மல்லிதூள் – 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், புளி – 1 சின்ன நெல்லிக்கா அளவை எடுத்து கொள்ளவும்.
முந்திரி, தக்காளி – 5, தேங்காய், பூண்டு இவை நான்கையும் நன்றாக பேஸ்ட் போல அரைத்து வைத்து கொள்ள வேண்டும்..
செய்முறை :
அடுப்பில் பாதிராத்தித்தை வைத்ததும் அதில் நல்லெண்ணெய் 3டேபுல் ஸ்பூன் எண்ணெயை ஊற்றவும் எண்ணெய் நான்கு காய்ந்ததும். அதில் வெந்தயம் 1/4 ஸ்பூன் போட்டு பொரிந்தவுடன், பின்னர் கடுகு மற்றும் சீரகம் போடவும் நான்கு பொரிந்தவுடன் அடுத்ததாக,
நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தை போட்ட பின் கருவேப்பிள்ளையை போட்டு வதக்கி கொள்ளவும். பின்பு சின்ன வெங்காயம் மற்றும் 5 வகை காய்கறிகளை போட்டு கிளறிவிட்டு வதக்கவும்.
இதனால் காய்களின் பச்சை வாடை நீங்கி காய்கள் ஓரளவு நான்கு வதங்கி இருக்கும். இதனை அடுத்து, மசாலாவை போடவும், மிளகாய் தூள், சாம்பார் பொடி, மஞ்சள் -1/4 ஸ்பூன், மல்லி தூள், கரம் மசாலா தூள் 1/4 ஸ்பூன் ஆகியவை போட்டு நான்கு வதக்கி கொள்ளவும்.
பின்பு, அரைத்து வைத்திருக்கும் முந்திரி, தக்காளி, தேங்காய், பூண்டு ஆகிய நான்கும் கலந்து விடவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும், காய்கள் வேகும் அளவு தண்ணீர் ஊற்றவும் காய்கள் பாத்திரத்தின் மேலே வரும் அளவு தண்ணீர் இருக்க வேண்டும்.
இவைகளுடன் புளி கரைசலும் கடைசியாக ஊற்றி அதற்கான தண்ணீரும் சேர்த்து நநகு கலந்து விடவும். நன்றாக கொதித்து கொழம்பு பதத்திற்க்கு வந்ததும் சிறிது கொத்தமல்லியை தூவி இறக்கி கொள்ளவும். அவ்வளவே தான் சுவையான மரக்கறி குழம்பு இப்போ ரெடி.