வைட்டமீன் டி பயன்கள் நம் உடலுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதனை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த வைட்டமீன் டி நம் உடலுக்கு மிகவும் அவசியம் வாய்ந்த ஊட்டசத்துகளில் ஒன்றாகும். ஏனெனில் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு திறனை இது அதிகரிக்கிறது.
வைட்டமீன் டி என்றால் என்ன என்பதை பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். வைட்டமீன் டி கரைகின்ற கொழுப்பு வைட்டமீன் என்பதாகும்.
இவ்வகை வைட்டமீன் நமக்கு இயற்க்கையாகவும் நாம் உண்ணும் சில வகை உணவில் இருந்தும் கிடைக்கிறது.
வைட்டமீன் டி பயன்கள் நம் உடலுக்கு எவ்வாறு உதவுகிறது…
வைட்டமீன் டி குறைபாடு அறிகுறிகள் நம் உடலில் வைட்டமீன் டி சத்து குறைவதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இழக்க நேரிடும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவதின் மூலம் நம் உடல் பல்வேறு உடல்நிலை சார்ந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
குறிப்பாக, திடீர் உடல் சோர்வு, மன உளைச்சல், தசை வலி, பலவீனமான உணர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
மேலும் எழும்பு முறிவு மற்றும் எழும்பு சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த வைட்டமீன் டி ஆனது உலகில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 50 விழுக்காடு மக்கள் இந்த வைட்டமீன் குறைபாட்டை சந்திக்கிறார்கள் என சில ஆய்வில் தெரிவிக்கின்றனர்.
இதில் இந்தியாவில் மட்டும் 70 சதவீத மக்கள் இதன் குறைபாட்டை சந்திக்கிறார்கள் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதற்கு காரணம் நாம் உண்ணும் உணவில் வைட்டமீன் டி பெருமளவு சேர்த்து கொள்ளாதது மற்றும் சூரிய ஒளியில் நேரத்தை செலவிடாதது என்கின்றனர்.
வைட்டமீன் டி பயன்கள் நம் உடலில் (vitamin d foods) அதிகரிக்க உண்ண வேண்டியவை தினமும் ஒரு டம்லர் பால் மாற்றும் பால் சார்ந்த உணவுகள், நட்ஸ், கொழுப்பு மீன்கள், ஆரஞ்சு ஜூஸ் போன்ற உணவுகளில் நமக்கு செயற்கையாக வைட்டமீன் டி ஓரளவு கிடைக்கின்றது.
இயற்க்கையாக உடலுக்கு வைட்டமீன் டி- யை தரக்கூடியது சூரிய ஒளி மட்டும் தான். தினமும் நாம் சூரிய ஒளி கதிரில் சிறிது நேரத்தை செலவிடுவது மிகவும் அவசியமானது.
ஏனெனில் (vitamin d benefits)வைட்டமீன் டி-யை பெறுவதற்கு மட்டுமல்ல உடல் சுறுசுறுபிற்காகவும், புத்துணர்ச்சிக்காகவும் அதிகாலை வெளியிலில் சிறிது நேரத்தை களிப்பது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
அதிகாலையில் சூரிய ஒளியை பெற காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையிலும் மாலையில் 4.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் சூரியனில் இருந்து வெளிவரும் மிதமான வெப்பம் நம் உடலில் படும்படி செய்வதற்கான உகந்த நேரம்.
சூரிய ஒளியை பெருவதற்க்கு உச்சி வெயிலிலோ, சுட்டெரிக்கும் கத்திரி வெளியிலிலோ நாம் அதிக நேரம் சுற்றி திரிந்தால் உடலில் நீர் சத்து குறைவதுடன், உடலின் தோல்கள் வெயிலின் தாக்கத்தால் சேதமடையும் வாய்ப்பும் உள்ளது..
வெருமென வெளியிலில் நிற்பதைவிட சிறிய அளவிலேனும் உடற்பயிற்சி அல்லது யோக போன்றவைகளை செய்வதன் மூலம்
உடல் வழு பெறுவது மட்டுமல்லாமல் மூளையும் புத்துணர்ச்சி பெற்று நாம் அன்றாடும் செய்யும் பணிகளை சிறப்பாக செய்துகொள்ள உதவும்.