உடல் எடை குறைக்க உதவும் அவல் உப்புமாவை எவ்வாறு செய்வது என்பதினை இதில் காண்போம்…
சிறிய வயது முதல் பெரிய வயது வரை பொதுவாகவே உடல் எடை அதிகரிப்பதால் ஆண்களும், பெண்களும் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். இதில் சிலருக்கு உடல் பருமன் ஒரு குறையாகவும், மன உளைச்சலையும் தருகிறது.
இந்த உடல் பருமனை நாம் தினமும் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளுதல் மற்றும் உடற் பயிற்சியினை தொடர்ந்து கடைபிடித்தாலே உடல் பருமனை இயற்கையாகவே கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
மேலும், இதனை நாம் உண்ணும் உணவு முறைகளிலும் உடல் எடை கூடுவதை கட்டுபடுத்த முடியும். உடலை சீராகவும், எடை அதிகரிக்காமலும் கட்டுக்குள் வைத்து கொள்வதற்க்கு ஏறலாமான உணவு முறைகள் இருக்கின்றன.
அப்படியான உணவு முறைகளில் அவல் உப்புமாவும் உடலுக்கு மிகுந்த நன்மை பயக்குகிறது. பொதுவாகவே அவல் நம் உடலுக்கு மிகவும் நன்மை அளிக்க கூடிய ஒன்று தான்.
உடல் எடை குறைக்க உதவும் அவல் உப்புமா செய்வது எப்படி
இதில், உடல் எடையை குறைபதற்க்கு டயட்டில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அவல் உப்புமா சாப்பிடுவதின் மூலம் உடல் எடையை குறைக்க மிகவும் உதவுகிறது.
அவல் உப்புமா செய்யும் வழிமுறைகள்
அவல் உப்புமா செய்ய முதலில் ஒரு கப் அவல் எடுத்து நன்றாக தண்ணீரில் அலசி பின்னர் வடிகட்டி எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
பின்பு அவலை ஊர வைக்க பாத்திரத்தில் அவல் மூழ்கும் வரை தண்ணீரை நிரப்பி கொள்ள வேண்டும்.
பின், அவலை 20 நிமிடங்களுக்கு நன்கு ஊற வைக்க வேண்டும்.
அவல் உப்புமா செய்ய தேவையான பொருட்கள்
ஒரு குழி கரண்டி சமயல் எண்ணெய், தாளிக்க கடுகு ஒரு ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன், உலுத்தம் பருப்பு மூன்று ஸ்பூன், கடலை பருப்பு இரண்டு ஸ்பூன், பச்சை மிளகாய் இரண்டு, ஒரு பெரிய வெங்காயம் எடுத்து கொள்ள வேண்டும்.
தக்காளி இரண்டு எடுத்து கொண்டு அதனை பொடியாக நறுக்க வேண்டும். கருவேப்பிலை மூன்று கொத்துக்களை எடுத்து வைத்து பகொண்ட பின் கொத்தமல்லி தழை சிறிதளவு சேர்த்து வைக்க வேண்டும்.
இவைகளுடன் மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் மற்றும் தேவைக்கு ஏற்ப உப்பை எடுத்து வைத்து கொள்ள வேண்டும.
செய்முறை
அடுப்பில் கடாயை வைத்து அளவுக்கேற்ப எண்ணெய்யை ஊற்ற வேண்டும்.எண்ணெய் காய்ந்த பிறகு மேற்குறிபிட்டுள்ள பொருட்களான கடுகு ஒரு ஸ்பூன் கடுகு பொறிந்ததும், சீரகம் 1/2 ஸ்பூன் போடவும்.
சீரகம் பொறிந்தவுடன் உலுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பும் போட்டு வெண்ணிறமாக வதக்கவும்.
பின்னர், பொடியாக நறுக்கி வைத்திருந்த வெங்காயம் மற்றும் கருவேப்பிலையை போடவும். இதில் வெங்காயம் அதிகமாக வதங்க தேவையில்லை லேசாக வதங்கினால் மட்டும் போதும்.
இதனுடன்,பொடியாக நறுக்கிய தக்காளி, துண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவைகளை போடவும்.
தக்காளி நன்றாக வேகும் வரை நன்றாக வதக்கவும், அதனுடன் உப்புமாவுக்கு உங்களுக்கு தேவையான அளவுக்கு உப்பை சேர்த்து கொள்ளவும்.
மேலும், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் போட்டு நன்கு வதக்கவும், தக்காளியை நன்றாக வேக வைக்கவும்.
பின்பு ஊர வைத்த அவலை எடுத்து கொள்ள வேண்டும் அவைகள் தண்ணீரில் ஊறி நீரை உறிஞ்சி இருக்கும்.
அதனை, அப்படியே கடாயில் சேர்த்து நன்றாக கிளறி விட்டு வதக்கவும், இதனுடன் ஏற்கனவே எடுத்து வைத்த கொத்தமல்லி தழையை சேர்த்து நன்கு கிளறி விட்டு கடாயை அடுப்பில் இருந்து இறக்கவும்.
தண்ணீர் ஏதும் சேர்க்க வேண்டாம் தேவைப்பட்டால் லேசாக தண்ணீர் தெளித்து உப்புமாவை கிளறி விட்டு விடவும். அவ்வளவு தான் இப்போது சூடான சுவையான அவல் உப்புமா சாப்பிட தயாராகிவிட்டது.