கொரோனா அறிகுறி இருந்தால் தனிமைபடுத்தி கொள்வது…

கொரோனா அறிகுறி இருந்தால் தனிமைபடுத்தி கொள்வது எப்படி என்பதினை பற்றி தெரிந்து கொள்வோம்…

கொரோனா அறிகுறியா? எப்படி தனிமைபடுத்தி கொள்வது
covid19

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாம் அலை பரவலாக பரவி வருகிறது. இது கடந்த வருடம் பரவிய முதல் அலையை போன்று இல்லாமல் மிக வேகமாகவும், வீரியம் மிக்கதாகவும் பரவி வருகின்றது.

இதனால், இந்தியாவில் கொரோனா உயிர்ழப்புகள் அதிகமாகி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் பாதிப்படைவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டு செல்கிறது.

மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்ஸிஜன் போன்றவைகள் கிடைக்க பெறாமல் நோய் தோற்றுக்கு ஆளானவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதனால் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்கு சரியான நேரத்தில் ஆக்ஸிஜன் கிடைக்க பெறாததால் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறக்கும் அவலம் நடந்தது..

இதை தொடர்ந்து, இந்தியாவில் பரவி வரும் கொரோனா இரண்டாம் அலையை கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. அதன்படி தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் மும்முரபடுத்தி வருகின்றனர்..

இருப்பினும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. தொற்று அதிகமாக பரவி வரும் மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். அதன் அடிபடையில் தமிழகத்திலும் வரும் மே 10 முதல் 24 காலை 4மணி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது..

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கொரோனா தொற்றினால் பாதிப்படைவரின் எண்ணிக்கை 25,000 கடந்து வருகிறது.இதனால் நாம் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருப்பது என்பது மிகவும் அவசியம் ஆகிறது.

கொரோனா தொற்றின் அறிகுறிகள் ஏற்பட்டாலோ அல்லது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டாலோ உடனே உங்கள் அருகில் இருக்கும் மருத்துவரை அணுகுங்கள். கீழ்வரும் கொரோனா தொற்றின் அறிகுறிகள் ஏற்பட்டால் உங்களை எப்படி தனிமைபடுத்தி கொள்வது என்பதை பார்ப்போம்..

கொரோனா அறிகுறி இருந்தால் தனிமைபடுத்தி கொள்வது

காய்ச்சல், வறண்ட இருமல், தலைவலி, தொண்டை கரகரப்பு, உடல் வலி, மூச்சு விடுவதில் சிரமம், வெகு சிலநாட்களாகவே வாசனை அறியா தன்மை, வெகு சில நாட்களாகவே சுவை அறியா தன்மை போன்ற அறிகுறிகள் எதேனும் இருப்பின் அவை கொரோனாவாக இருக்கலாம்.

இதில் உங்கள் வீட்டில் இருக்கும் நபர்களில் யாருக்கேனும் இந்த அறிகுறிகள் இருக்குமாயின் நீங்களும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

சுயபாதுகாப்பில் இருக்கும் பொழுது

கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும

இரத்த ஆக்ஸிஜன் செறிவு 93% சதவீதத்துக்கு குறைந்தால் மருத்துவரின் ஆலோசனையை எடுத்து கொள்ள வேண்டும்.

மருத்துவர் ஆலோசனை படி இரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.

நீங்கள் செய்ய வேண்டியவை:

பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும், கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும், உங்களை தனிமைபடுத்தி கொண்டு ஓய்வு எடுக்க வேண்டும்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும், சுத்தமான காற்றோட்டத்தை பெறுவதற்க்கு வீட்டின் ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும்..

உடலை கண்காணித்தல்:

4 மணி நேரத்திற்க்கு ஒரு முறை வெப்ப பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

4 மணி நேரத்திற்க்கு ஒரு முறை உங்கள் உடலின் இரத்த ஆக்ஸிஜன் செறிவை ஆக்ஸி மீட்டர் கொண்டு பரிசோதிக்க வேண்டும்.

மருத்துவ பாதுகாப்பு:

தண்ணீர், பழச்சாறு, சூப் மற்றும் இளநீர் ஆகியவற்றை பருகலாம்

கவிழ்ந்து படுத்து நன்கு சுவாசிப்பதன் மூலம் இரத்த ஆக்ஸிஜன் அளவை அதிகபடுத்தலாம்

8 மணி நேரத்திற்க்கு ஒரு முறை பேராசிட்டாமல் மாத்திரை மற்றும் இருமல் மருந்து தேவைப்பட்டால் எடுத்து கொள்ளலாம்.

வைட்டமீன் நிறைந்த உணவு மற்றும் மினரல் சத்துக்கள் அடங்கிய உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.

நாள் ஒன்றுக்கு மூன்று முறை ஆவிபிடித்தல் மற்றும் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி வாய் கொப்பளிக்கலாம்.

செய்யக்கூடாதவை எவைகள்:

வீட்டு பாதுகாப்பில் இருக்கும் போது ரெம்டெசிவிர் மருந்தை உபயோகிக்க கூடாது.

படிசோனைட் மருந்தை உபயோகித்து ஆவி பிடித்தல் கூடாது

மருத்துவர் ஆலோசனை இல்லாமல் ஆக்ஸிஜன் சிலிண்டரை பயன்படுத்தி சுவாசிக்க கூடாது.

மருத்துவர் ஆலோசனை வழங்கும்பட்சத்தில் பின்வரும் மருத்துவ முறைகளை பின்பற்றவும்:

5 நாட்களுக்கு மேல் நோய் அறிகுறி இருந்தால் படிசோனைட் அளவு குறியீடுள்ள செயற்க்கை சுவாச கருவி மூலமாகவோ அல்லது உளற்பொடி உள்ளிருப்பான் மூலமாகவோ பயன்படுத்தலாம்.

ஐவர்மெக்டின் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை பயன்படுத்தலாம்

அறிகுறிகள் 7 நாட்களுக்கு மேல் அதிகமாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு குறைந்த அளவு ஸ்டீராய்டு மருந்துகளை பயன்படுத்தலாம்.

தேவையான அளவு ஆண்டிபயாடிக்ஸ் எடுத்து கொள்ளலாம்.

மேற்கண்ட மருத்துவ குறிப்புகள் கொரோனா தொற்றின் காரணமாக தம்மை தனிமைபடுத்தி கொள்பவர்களுக்கானது.

Exit mobile version