நாளை முதல் புதிய ஊரடங்கு கட்டுபாடுகள் அமலாகிறது…

நாளை முதல் புதிய ஊரடங்கு கட்டுபாட்டு விதிமுறைகள் அமலுக்கு வருகிறது அவைகள் என்னவென்று இதில் பார்போம்…

நாளை முதல் புதிய ஊரடங்கு கட்டுபாடுகள் அமலாகிறது
Lockdown

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வீச தொடங்கியது. இது கடந்த முறை பரவிய கொரோனாவை விட சற்று வேகமாகவே பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு முன்பை விட அதிகமாக உயர்ந்து வருகிறது.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை குறிப்பாக மகராஷ்ட்ரிஷா, டெல்லி, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு என சில மாநிலங்களில் அதிகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மக்கள் கடும் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.

பரவி வரும் கொரோனா இரண்டாம் அலையை கட்டுபடுத்த இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றனர்..

இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் கட்டுபாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியது தமிழக அரசு.

இருப்பினும், கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதற்க்கு முன் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 1000 முதல் 2000 வரை கொரோனா தொற்றல் பாதிக்கபட்டிருந்தனர். அந்த அளவுக்கு கரோனாவின் வீரியம் தமிழ்நாட்டில் குறைந்து காணபட்டது..

ஆனால், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகம் எடுக்க தொடங்கிய பிறகு கொரோனாவால் பாதிப்படைவோர் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்தது. இவை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் முதன் முறையாக இருவதாயிரத்தை கடந்தது

அதில் நேற்றைய தினம் மட்டும் தமிழகத்தில் 21,000 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கபட்டனர். 143 பேர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக சுகாதார துறை தெரிவித்தது..

இதனை தொடர்ந்து தமிழகத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வார தமிழக அரசு சார்பில் நாளை முதல் புதிய கட்டுபாட்டு விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது..

புதிய ஊரடங்கு கட்டுபாடுகள்

நாளை முதல் புதிய ஊரடங்கு கட்டுபாடுகள் அமலாகிறது

என பல்வேறு கட்டுபாட்டு விதிமுறைகளை தமிழக அரசு சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது. விதிமுறைகளை பின்பற்றி கொரோனாவில்இருந்து நம்மை பாதுகாத்து கொள்வோம்…

Exit mobile version