பொறி விளங்கா உருண்டை எப்படி செயலாம்…?

பொறி விளங்கா உருண்டை எப்படி செயலாம் அதனை பற்றி இதில் முழு விவரத்தை காண்போம்…

பொறி விளங்கா உருண்டை எப்படி செயலாம்...?
பொறி விளங்கா உருண்டை

பொதுவாக இனிப்பு வகை சார்ந்த உணவுகளை உண்பதில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை ஆர்வம் அதிகம் காணப்படும்.

சில இனிப்பு வகை உணவு பொருட்களை நாம் பெரும்பாலும் அதிக நாட்கள் உண்ணாமல் வைத்திருந்தாள் அவை கெட்டு போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆனால், நாம் தற்போது பார்க்க விருக்கும் பொறி விளங்கா உருண்டை ஒரு மாத காலம் வரை கூட இதனை அப்படியே வைத்திருந்து சாப்பிடலாம்.

நம் உடலுக்கு வலிமை தரக்கூடிய இவ்வகை பொறி விளங்கா உருண்டையானது நம் பாரம்பரிய உணவு முறைகளில் இந்த இனிப்பு வகை உணவும் ஒன்று தான். இதனை பெரும்பாலும் திருவிழா நாட்களில் இல்லங்களில் செய்வதை பார்த்திருப்போம்.

அப்பொழுது இனிப்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் இவை அதிகம் விற்பனை செய்யபடுகின்றன..

பொறி விளங்கா உருண்டை எப்படி செய்வது

நமது பாரம்பரிய இனிப்பு பொருளான பொறி விளங்கா உருண்டையை பொருள் விளங்கா உருண்டை என தான் முன்பு அழைக்கபட்டு வந்தது. கால போக்கில் இவை பொறி விளங்கா உருண்டை என தற்போது அழைக்கபட்டு வருகிறது..

இப்பொழுது பொறி விளங்கா உருண்டையை எவ்வாறு செய்வது அதற்கான தேவையான பொருட்கள் என்னென்ன என்பதினை பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1/2kg , வெல்லம் – 1/2kg, வேர்கடலை – 1/4kg, ஏலக்காய் – 5 -ஐ எடுத்து வைத்து கொண்டு ஏலக்காய் நன்கு இடித்து வைத்து கொள்ள வேண்டும்.

பொறி விளங்கா உருண்டை செய்முறை

பச்சரிசையை 1/2kg எடுத்து நன்கு கழுவி கொண்ட பின் அதனை 1/2 மணி நேரம் ஊரவைக்க வேண்டும். பின்பு 1/2 மணி நேரம் கழித்து நிழலில் காய வைக்க வேண்டும்.

அரிசியை நம் கைகளில் எடுத்து பார்க்கும் போது அவை கையில் ஒட்டாமல் இருந்தால் போதும்.

இப்பொழுது இந்த பதத்திலே அரிசியையும், ஏலக்காய்யும் சேர்த்து அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.

தற்போது பொறி விளங்கா உருண்டை செய்வதற்கான மாவு நமக்கு தயாராக உள்ளது. பின்னர் முதலில் நீங்கள் காரம் சார்ந்த உணவு பொருட்களை சமைக்காத பாத்திரத்திரத்தை தேர்வு செய்து வைக்க வேண்டும். ஏனென்றால் அப்பொழுது தான் இனிப்பு வகை உணவை சமைப்பதற்க்கு ஏதுவாக இருக்கும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 1/2kg வெல்லத்தை உடைத்து போட வேண்டும். பின் அதனில் வெல்லம் மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி பாகு காய்ச்ச வேண்டும்.

வெல்லம் நன்கு கரைந்ததும் அதனை வடிகட்டி கொண்டு மீண்டும் அடுப்பின் மீது வைத்து பாகு காய்ச்ச வேண்டும்.

பாகு நன்கு பதத்திற்க்கு வந்த பிறகு ஏற்கனவே அரைத்து ஜலித்து வைத்து இருக்கும் அரிசி மாவை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக பாகில் போட்டு கலக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை அனைத்து விட்டு பாத்திரத்தை கீழே இறக்கி வைத்த பின் மீதமுள்ள மாவையும் பாகினில் கொட்டி கலக்கவும்.

பாகு காய்ந்து கெட்டியாகத வண்ணம் பாகையும், மாவையும் நன்கு கலந்து விடவும் அதனுடன் தோல் நீக்கிய வேர்க்கடலையும் சேர்த்து கலக்க வேண்டும்.

இதனை இளஞ்சூட்டில் இருக்கும் போதே ஒவ்வொரு உருண்டையாக பிடித்து வைக்க வேண்டும். இப்போது சூடு லேசாக ஆரிய பின்பு சுவையான பொறி விளங்கா உருண்டை உண்பதற்க்கு தயாராகி விட்டது.

மேலும், இவ்வற்றினை நீங்கள். அவ்வ போது சாப்பிட ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து சேமித்து வைத்து கொள்ளலாம்.

அவ்வாறு சேமித்து வைத்த உருண்டைகளை அவ்வப்போது வெயிலில் வைத்து எடுத்து சேமித்து வைத்தால் கெடாமல் இருக்கும்.

Exit mobile version