IPLsports

ஐ‌பி‌எல் 2020: CSKvsMI தெறிக்கவிட்ட சென்னை

ஐ‌பி‌எல் 2020: CSKvsMI தெறிக்கவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று அபுதாபியில் நடைபெற்ற முதல் ஐ‌பி‌எல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர் பார்க்கபட்ட ஐ‌பி‌எல் 2020 நேற்று அபுதாபியில் தனது முதல் போட்டியை தொடங்கியது.

Dhoni

கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடும் விதி முறைகளுடன் முதன் முறையாக ரசிகர்கள் இன்றி போட்டி நடைபெற்றது.

ஐ‌பி‌எல் 2020:

சென்னை மற்றும் மும்பைக்கு இடையேயான முதல் ஐ‌பி‌எல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச்சை தேர்வு செய்து மும்பை அணியை பேட்டிங் செய்ய பணித்தது.

இதை தொடர்ந்து முதலில் ஆடிய மும்பை அணி 20-ஓவர்க்கு 162-ரன் எடுத்து 9-விக்கெட்டை பறிகொடுத்தது.

163-ரன் இலக்காக கொண்டு ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி(19.2) ஓவர்களில் 166-ரன் எடுத்தது 5-விக்கெட் வித்யாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

ஐ‌பி‌எல் 2020: CSKvsMI தெறிக்கவிட்ட சென்னை

சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த வெற்றியின் மூலம் தோனியின் தலைமையில் தனது 100-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ஆட்டதின் தொடக்கத்தில் 4-ரன்களுக்கு 2-விக்கெட்கலை பறிகொடுத்து ரசிகர்களுக்கு மோசமான ஆரம்பத்தை கொடுத்தனர்.

இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கபட்ட தமிழக வீரர் முரளி விஜய் தொடக்கதிலே 1-ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

பின்னர் தொடக்கம்முதல் நிதானமாக ஆடிய டு பிளஸ்சிஸ் மற்றும் அம்பத்தி ராயுடு அரை சதம் அடித்து சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

மேலும் சென்னை அணியின் லுங்கி நிகிடி தனது சிறப்பான பந்து வீச்சால் 3-விக்கெட்களை கைபற்றியது சென்னை அணிக்கு மேலும் வலு சேர்த்தது..

இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ‌பி‌எல் தரவரிசை பட்டியலில் 2-புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது.

இந்த வெற்றியை csk அணியின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் #thaladhoni, csk, cskvsmi, போன்ற ஹஸ்டாக் உருவாக்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகின்றனர் .

மும்பை இந்தியன்ஸ்:

மும்பை இந்தியன்ஸ் அணி ஐ‌பி‌எல் போட்டிகளில் தான் விளையாடும் முதல் போட்டியில் தொடர்ந்து 5-வது முறையாக தோல்வி அடைந்து உள்ளது.

இதை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் தனது அடுத்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடன் வரும் புதன் கிழமை நடைபெறுகிறது தற்போது மும்பை இந்தியன்ஸ் ஐ‌பி‌எல் தரவரிசை பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது..

சென்னை மற்றும் மும்பை:

மும்பை இந்தியன்ஸ்:சௌரப் திவாரி 42(31), குய்ண்டோன் டே கோக் 33 (20), கீரோன் பொலார்ட் 16 (14),

இதில் சென்னை பந்து வீச்சு: லுங்கி நிகிடி 3/38(4), தீபக் சச்சார் 2/32(4), ரவீந்திர ஜடேஜா 2/42 (4),

சென்னை சூப்பர் கிங்ஸ் : 71 (48), பஃப் டூ பிளஸ்சிஸ் 58 (44), சாம் குர்ரன்18 (6), மும்பை பந்து வீச்சு: ட்ரெண்ட் பௌல்ட்1/23 (3.2), ஜேம்ஸ் பட்டின்சோன்1/27 (4), ராகுல் சச்சார்1/36 (4).

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆட்ட நாயகனாக அம்பத்தி ராயுடு தேர்வு செய்யபட்டார் வரும் செவ்வாய் கிழமை 22-ஆம் தேதி ராஜஸ்தானுடன் விளையாட இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !