IPLsports

மும்பை vs ஹைத்ராபாத் இன்றைய போட்டியில்

மும்பை vs ஹைத்ராபாத் இன்றைய போட்டியில் பிற்பகல் 3.30 மணிக்கு விளையாடுகின்றன.

மும்பை vs ஹைத்ராபாத் இன்றைய போட்டியில்
MIvsSRH

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைத்ராபாத் இடையே நடைபெறும் இன்றைய போட்டியில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஷார்ஜா ஸ்டூடியத்தில் விளையாடுகின்றன இது ஐ‌பி‌எல் சீசன் 13-இல் 17-வது போட்டியை இந்த இரு அணிகள் விளையாடுகின்றன.

ஐ‌பி‌எல் தரவரிசை பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி 3-வது இடத்திலும் சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணி 4-வது இடத்திலும் உள்ளது.

இந்த சீசனில் முதல் மூன்று மற்றும் நான்காவது இடத்தை பிடித்துள்ள இந்த இரு அணிகள் விளையாடும் போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கபடுகிறது.

எனவே இன்றைய போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என இரு அணிகள் ரசிகர்கள் இடையே அதிகம் எதிர்பார்க்கபடுகிறது..

மும்பை vs ஹைத்ராபாத் இன்றைய போட்டியில்

இப்போட்டியில் மும்பை அணியை வென்று சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணி புள்ளி பட்டியலில் மும்பை அணியை பின்னுக்கு தள்ளும் என எஸ்‌ஆர்‌எச் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

ஐ‌பி‌எல் 2020: தெறிக்கவிட்ட சென்னை

இதனிடையே டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஆட்டதை முதலில் விளையாட தொடங்கியது. ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே முதலிலே அதிரடியாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மா தலைமையில:

ரோஹித் ஷர்மா, டீ.கோக், எஸ். யாதவ், கிஷான், ஹார்டிக் பாண்டியா, பொல்லார்ட், பாண்ட்யா, ஜேம்ஸ் பட்டின்சோன், ராகுல் சாசர், ட்ரெண்ட் பௌல்ட், ஜஸ்பிர்ட் பும்ர்க் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பட்டியலில் உள்ளனர்..

முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் ஷர்மா மற்றும் டீ கோக் ஆடினர் அதில் ரோஹித் ஷர்மா ஒரே ஒரு சிக்சர் அடித்து விட்டு 6 ரன்களுடன் வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய எஸ்.யாதவ் 18 பந்துகள் விளையாடி 27 ரன்களை கொடுத்து 2 வது விக்கெட்டாக வெளியேறினார்.

பொருமையாக ஆடிய டீ.கோக் 39 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து மும்பை அணிக்கு அரை சதத்தை கொடுத்தார். ஒரு கட்டத்தில் அவரும் ரஷீத் கான் வீசிய பந்தில் அவரிடமே கட்ச்சை கொடுத்து அவுட் ஆனார்..

பின்னர் களமிறங்கிய வீரர்கள் யாரும் அரை அடிக்க வில்லை என்றாலும் நிதானமாக ஆடி அணிக்கு வலுவான ஒரு இலக்கையே உருவாக்கினார்கள்..

இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ்க்கு வைட்,நோ பால், மூலம் 4-ரன்கள் கிடைத்தது மும்பை அணியில் அதிகபட்சமாக டீ.கோக் 67 ரன்களை எடுத்துள்ளார்.

இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்களை பறிகொடுத்து 208 ரன்களை ஹைத்ராபாத் அணிக்கு நிர்ணயித்தது..

சன் ரைசஸ் ஹைத்ராபாத்

பந்துவீச்சில் எஸ்‌ஆர்‌எச் அணியை சேர்ந்த எஸ்.ஷர்மா மற்றும் எஸ்.கௌல் தலா இரண்டு விக்கெட்களை கைபற்றினர் ரஷத் கான் 1விக்கெட்டை கைப்பற்றினார்.

இதனை அடுத்து 209 ரன்களை இலக்காக கொண்டு சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணி இன்னும் சற்று நேரத்தில் விளையாட உள்ளது..

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஹைத்ராபாத் அணி வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்து விடும்.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !