kkr vs dc 2021: டெல்லியை முந்துமா கே‌கே‌ஆர்?

kkr vs dc 2021: இன்று நடைபெறும் ஐ‌பி‌எல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கள் மோதுகிறது.

kkr vs dc 2021: டெல்லியை முந்துமா கே‌கே‌ஆர்?
kkr vs dc

தற்போது நடைபெறும் ஐ‌பி‌எல் சீசன் 14 -இன் 59வது போட்டியான குவாலிபர் 2 -இல் ( qualifier 2 ipl 2021). டெல்லி கேபிடல்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பல பரிட்சை செய்கின்றன.

இவ்விரு (dc kkr 2021)அணிகள் மோதும் போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 7.30 மணிக்கு ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம்மில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்த சீசனை பொறுத்தவரை தற்போது (kkr vs dc 2021) விளையாடி வரும் இப்போட்டியினை மிக முக்கியமான போட்டியாக ஐ‌பி‌எல் ரசிகர்கள் அனைவராலும் பார்க்கபடுகிறது.

ஏனெனில் இப்போட்டியில் வெல்லும் அணி தான் ஐ‌பி‌எல் சீசன் 14 இன் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (csk) அணியுடன் மோத முடியும் என்பதால்.

இந்த குவாலிபர் 2 தகுதி சுற்று தற்போது ஐ‌பி‌எல் ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காரணம், இது வரை நடந்த முடிந்த ஐ‌பி‌எல் சீசன் 14 -இன் 14 லீக் போட்டிகளில் 10 போட்டிகளில் வென்று 4-இல் தோல்வியை பெற்றுள்ளது டெல்லி கேபிடல்ஸ்.

ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி? மொத்தம் விளையாடிய 14 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஆகையால் கொல்கத்தா அணி ஒன்றும் சும்மா இல்லை டெல்லி உடனான கடந்த போட்டியில் எளிதாக வெற்றியை ஈட்டி உள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

எனவே, இவ்விரண்டு அணிகளுக்கு இடையே நடைபெறும் இன்றைய போட்டி கடமையான போட்டியாக இருக்கும் என்பதனால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்க போவதில்லை.

மேலும், இப்போட்டியில் தோற்க்கும் அணி இந்த சீசனை விட்டு வெளியேறுகிறது. வெற்றி பெரும் அணி ஏற்கனவே முதல் அணியாக இறுதி போட்டிக்குள் நுழைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது..

kkr vs dc 2021

இன்றைய போட்டியில் பேட்டிங் செய்ய டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறக்கபட்டனர்.

டெல்லி அணியின் முதல் விக்கெட்டாக பிரித்வி ஷா 18 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சக்கரவர்த்தி வீசிய பந்தில் எல்‌பி‌டபில்யு ஆனார்.

பிரித்வி ஷாவின் விக்கெட்டை தொடர்ந்து மார்கஸ் ஸ்டோய்னீஸ் சிகர் தவானுடன் இணைந்து விளையாட களமிறக்கபட்டார். இவர்கள் இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை 70 ரன்கள் வரை எடுத்து சென்றனர்.

ஆனால், மார்கஸ் ஸ்டோய்னீஸ் 11வது ஓவரிலும் சிகர் தவான் 14வது ஓவரிலும் தங்களது விக்கெட்களை அடுத்தடுத்து பறிகொடுத்தனர்.

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்த், ஷிம்ரோன் ஹெட்ம்யர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதி வரை ஆட்டமிழக்காமல் நிலைத்து நின்று ஆடிய ஷ்ரேயாஸ் ஐய்யர் 27 பந்துகளுக்கு 30 ரன்களை எடுத்து இருந்தார்.

20 ஓவர் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் 5 விக்கெட்களை இழந்து 135 ரன்களில் சுருண்டது.

இதை தொடர்ந்து 136 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தற்போது விளையாடி வருகிறது.

Exit mobile version