கோலி கொடுத்த ஐடியா தட்டி தூக்கிய சாஹர்

கோலி கொடுத்த ஐடியா தட்டி தூக்கிய சாஹர் நேற்று நடைபெற்ற போட்டியில் மைதானத்தில் நிகழ்ந்த சுவாரஸ்யமான தருணம்..

கோலி கொடுத்த ஐடியா தட்டி தூக்கிய சாஹர்
ind vs aus

நடைபெற்று வரும் t20 world cup 2021 – கிற்கான பயிற்சி ஆட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்த வரிசையில் நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையான பயிற்சி போட்டி நடைபெற்றது.

ind vs aus இடையேயான பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாயாட களமிறங்கியது.

இதில், ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பீன்ச்ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரிலே டேவிட் வார்னர் 7 பந்துகளுக்கு 1 ரன் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.

டேவிட் வார்னர் விக்கெட்டை தொடர்ந்து மிட்சல் மார்ஷ் தான் எதிர் கொண்ட முதல் பந்திலே டெக் அவுட் ஆனார்.

இவரை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பீன்ச் 10 பந்துகளுக்கு வெறும் 8 ரன்களை பெற்ற நிலையில் தன் ஆட்டத்தை இழந்தார்..

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில் அந்த அணியின் ஆட்டக்காரர்கள் ஸ்டீவ் ஸ்மித், கெளன் மக்ஸ்வெல், மார்கஸ் டோய்னீஸ் ஆகியோர் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் ஸ்டீவ் ஸ்மித் மட்டும் அணியின் அதிகபட்சமாக 48 பந்துகளுக்கு 57 ரன்களை எடுத்து இருந்தார்..

இறுதியில் ஆஸ்திரேலியா அணி 20 ஓவருக்கு 5 விக்கெட்களை இழந்து 152 ரன்களை எடுத்து இருந்தது.

கோலி கொடுத்த ஐடியா தட்டி தூக்கிய சாஹர்

நேற்று நடந்த போட்டியில் சுவாரஸ்யம் என்ன என்றால் இந்திய அணியின் 11 வது ஓவரை ராகுல் சாகஹர் வீசினார். அப்போது ஆஸ்திரேலியா அணியில் பேட்டிங்கில் இருந்தது கெளன் மக்ஸ்வெல்.

அப்போது ராகுல் சாகஹர் வீசிய ஒரு பந்தை கெளன் மக்ஸ்வெல்ல் அசால்ட்டாக ரிவர்ஸ் பேட்டிங்கில் பௌண்ட்ரிக்கு தூக்கி அடித்தார்.

இதை பார்த்து கடுப்பாகி போன இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உடனே ராகுல் சாகஹர் அழைத்து பேசி அவருக்கு ஐடியா கொடுத்ததை அடுத்து ராகுல் சாகஹர் தனது ஆஃப் சைடில் செலுத்தினார்.

அதை லாவகமாக வளைத்து அடிக்க முற்பட்ட கெளன் மக்ஸ்வெல்ல் பேட்டின் எட்ஜில் பட்டு க்ளீன் போல்டு ஆனார்..

இதை சற்றும் எதிர்பாராத கெளன் மக்ஸ்வெல்ல் கடுப்பில் ஆட்டத்தை விட்டு வெளியேறினார்.

இந்த விக்கெட்டானது ஆஸ்திரேலியா அணியின் ஒரு பலம் வாய்ந்த விக்கெட்டை ராகுல் சாகஹர் வீழ்த்தியது மைதானத்தில் பாராட்டை பெற்றது.

இதை தொடர்ந்து இந்திய அணி 153 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

முதலாவதாக ஆடிய கே ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இவர்களது கூட்டணி அரை சதத்தை எட்டியது.

பின்னர், கே ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழக்க இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ரோஹித் ஷர்மா 41 பந்துகளில் 60 ரன்களை எடுத்துவிட்டு ஆட்டத்தை விட்டு சென்றார்கள்.

இவர்களை அடுத்து களமிறங்கிய சூர்யக்குமார் யாதவ் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் நிலைத்து நின்று ஆடி இந்திய அணியின் வெற்றி பாதைக்கு எடுத்து சென்றனர்.

இறுதியில் இந்திய அணி 17 வது ஓவர் கடைசி பந்தில் 153 ரன்களை எடுத்து இலக்கை எளிதாக அடைந்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா உடனான பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

Exit mobile version