Cricketsports

ind vs eng odi: 89 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி…

ind vs eng odi: 89 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இந்திய அணி உள்ளது.

ind vs eng odi: 89 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி
Rishabh pant

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த இரு அணிகளும் தங்களது 4வது டெஸ்ட்(ind vs eng 4th test) தொடரை விளையாடி கொண்டிருக்கிறது.

இந்த போட்டியானது அகமதாபாத்தில் நேற்று தொடங்கி விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

முதலில் விளையாட களத்தில் இறங்கிய இங்கிலாந்து வீரர்களின் தொடக்க ஆட்டகாரர்கள் ஜாக் கிராவ்லெய் 30 பந்துகளை எதிர்கொண்டு ஒரு 4 உடன் 9 ரன்களை எடுத்தார்.

இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய டோம் சிம்ப்ளே 8 பந்துகளில் 2 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்..

இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தது அந்த அணிக்கு முகவும் பின்னடைவை தந்தது.

அடுத்ததாக களமிறங்கிய வீரர்கள் ஜோன்னி பைர்ஸ்டோவ் 67 பந்துக்கு 6 ஃபோர் 28 ரன்களும் .

பென் ஸ்டாக் 121 பந்தில் 6 ஃபோர் 2 சிக்சர் 55 ரன்களும், போப் 89 பந்திகளில் 2 ஃபோர் 29 ரன்கள், டன் லாரன்ஸ் 74 பந்துகளுக்கு 8 ஃபோர் 46 ரன்கள் எடுத்து இருந்தனர்.

அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 9 பந்துக்கு 1 ஃபோர் உடன் 5 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார் அணியில் அதிகபட்சமாக பென் ஸிடோக்ஸ் 55 ரன்களை எடுத்து இருந்தார்..

இங்கிலாந்து தனது முதல் நாள் இன்னிங்சில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களை இழந்தது.

இந்திய அணியில் அக்ஷர் பட்டேல் மற்றும் அஷ்வின் வீசிய சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து அணி 205 ரன்களை மட்டுமே எடுத்தது.

ind vs eng odi: 89 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி…

இதை தொடர்ந்து, ஆடிய இந்திய அணி தொடக்கதிலே ஷூப்மன் கில் விக்கெட்டை பறிகொடுத்தது. அடுத்து களமிறங்கிய ரோஹித் ஷர்மா 144 பந்துகளில் 7 ஃபோர் 49 ரன்களை எடுத்து அரை சதம் அடிக்க முடியாமல் ஆட்டமிழந்தது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது.

தொடர்ந்து ஆடிய இந்திய வீரர்கள் புஜாரா 66 பந்துக்கு 1 ஃபோர் 17 ரன்களுடனும், ரகானே 45 பந்துகளில் 4 ஃபோர் 27 ரன்களுடனும்,

ரிஷப் பாண்ட் 118 பந்துகளில் 13 ஃபோர் 2சிக்சர் 101 ரன்கள். அடித்து இந்திய அணியின் ரன் விகிதத்தை உயர்த்தினார். இவரை தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் 117 பந்துகளில் 8 ஃபோர் 60 ரனகள் எடுத்தனர்..

இறுதியில் இந்திய அணி இன்றைய ஆட்ட முடிவில் 7 விக்கெட்களை இழந்து 294 ரன்களை எடுத்தது.

இந்திய அணியின் கேப்டன் கோலி 8 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார் அணியில் அதிகபட்சமாக ரிஷப் பாண்ட் 101 ரன்களை எடுத்தார்..

ind vs eng odi: இந்திய அணி 294 ரன்கள் எடுத்ததன் மூலம் இங்கிலாந்து அணியை விட 89 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !