Cricketsports

ind vs nz t20 இந்தியாவுக்கு 154 ரன்கள் இலக்கு

ind vs nz t20 போட்டியில் நியூசிலாந்து அணி 153 ரன்களை எடுத்து இந்தியாவுக்கு 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது..

ind vs nz t20 இந்தியாவுக்கு 154 ரன்கள் இலக்கு
ind vs nz

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் t20 போட்டியில் இன்று தங்களது இரண்டாவது போட்டியை விளையாடி வருகின்றனர்.

இவ்விரு அணிகள் மோதும் போட்டியானது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜேஎஸ்சிஏ (JSCA International Stadium complex) இன்டர்நேஷனல் மைதானத்தில் இன்று மாலை 7.00 மணிக்கு தொடங்கியது..

போட்டிகள் தொடங்கபடும் முன் இரு அணிகள் கேப்டன்கள் முன்னிலையில் டாஸ் போடபட்டது. அதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய பணித்தது.

இதனை அடுத்து முதலில் பேட்டிங் செய்ய நியூசிலாந்து அணியில் இருந்து மார்டின் குப்டில் மற்றும் டார்லி மிட்சல் ஆகியோர் களமிறங்கினர்.

ஆட்டத்தின் தொடக்கத்திலே இவ்விரு வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 4 ஓவருக்கு 48 ரன்களை எடுத்த நிலையில் மார்டின் குப்டில் விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து அணி.

ind vs nz t20

பின்னர், டார்லி மிட்சல் உடன் ஜோடி சேர்ந்து ஆட வந்த மார்க் சப்மன் 17 பந்துகளை எதிர்கொண்டு 21 ரன்களை பெற்று தனது விக்கெட்டை இழந்தார்.

இவரை தொடர்ந்து நிதானமாக ஆடி வந்த டார்லி மிட்சல் 28 பந்துகளுக்கு 31 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அப்போது நியூசிலாந்து அணி 11- வது ஓவரில் 3 விக்கெட்களை பறிகொடுத்து 90 ரன்களை பெற்று இருந்தது. இவர்களை தொடர்ந்து நியூசிலாந்து,

அணியில் இருந்து களமிறங்கிய டிம் செய்பேர்ட் 15 பந்துகளை எதிர்கொண்டு 13 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து அதிரடியாக விளையாடி வந்த கெலேன் பிலிப்ஸ் 21 பந்துகளில் 3 சிக்சர்களை விளாசி 34 ரன்களை அணிக்கு பெற்று தந்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியை பொறுத்த வரையில் நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக 3 சிக்சர்களை அடித்துள்ளார் கெலேன் பிலிப்ஸ்..

இவர்களை தொடர்ந்து ஆடிய ஜேம்ஸ் நீஷம் 12 பந்துகளில் வெறும் 3 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர் ஆடிய மிட்சல் சண்ட்னர் 8 ரன்களும் ஆடம் மில்னே 5 ரன்களும் எடுத்து இருந்த நிலையில் போட்டி 20 ஓவர்கள் நிறைவு பெற்றது.

கடைசியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 153 ரன்களை பெற்றது. இதனை தொடர்ந்து 154 ரன்கள் இலக்காக கொண்டு தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !