IPL 2021 Schedule: சி‌எஸ்‌கே முதல் மேட்ச் யாருடன் தெரியுமா?

IPL 2021 Schedule: சி‌எஸ்‌கே விளையாடும் போட்டிகளின் முழு விவரம் வெளியாகி இருக்கிறது அதனை இப்போது காண்போம்…

IPL 2021 Schedule: சி‌எஸ்‌கே முதல் மேட்ச் யாருடன் தெரியுமா?
csk

சீசன் 14 வது ஐ‌பி‌எல் போட்டிக்கான ஏலம் சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் எட்டு அணிகள் கலந்து கொண்டது அதில் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தின் மூலம் தேர்வு செய்வதற்கான ஏலம் நடைபெற்றது.

அந்த வகையில். நடைபெற்ற ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் வீரர்களை ஏலம் எடுத்து தங்களுக்கு தேவையான ப்ளேயர்களை தேர்வு செய்தனர்.

அதன் படி, இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட போகும் வீரர்கள் பட்டியல்.

கேப்டன் மகேந்திர சிங் தோனி, அம்பட்டி ராயுடு, சி. ஹரி நிஷாந்த், செடெஷ்வர் பூஜாரா, பாஃப் டூ பிளேஸ்சிஸ், சுரேஷ் ரைனா, ருட்டுராஜ் கைக்வாத், கே. பகத் வர்மா, டிவனே பிராவோ, கிறிஷ்னப்பா கௌதம்,

மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரன், நாராயண் ஜகடீசன், ராபின் உத்தபா, தீபக் சச்சார், ஹரி ஷங்கர் ரெட்டி, இம்ரான் தாகிர், ஜோஸ் ஹஜ்லெவூட், கார்ன் ஷர்மா, ஏஎம். ஆசிப், லுங்கி நிகிடி, ரவிஸ்ரீனிவசன் சாய் கிஷோர், ஷர்டுல் தாகூர் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களால் அன்போடு சின்ன தல என்றழைக்கபடும் சுரேஷ் ரைனா தற்போது சென்னை அணியில் சேர்க்கபட்டுள்ளார்.

இதனால் வரும் ஐ‌பி‌எல் 2021-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டிகள் களத்தில் சூடுபிடிக்கும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கடந்த சீசன் 2020 ஐ‌பி‌எல் போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் நடைபெறவில்லை. மாறாக கடந்த சீசனை ஐக்கிய அமீரக நாடுகளில் நடத்த முடிவு செய்தது பி‌சி‌சி‌ஐ.

அப்போட்டிகளில் பங்கு பெற்று விளையாடுவதற்காக ஐக்கிய அமீரகம் சென்ற சுரேஷ் ரைனா திடீரென்று தான் விளையாட போகும் போட்டிகளை ரத்து செய்துவிட்டு பாதியிலே இந்தியா திரும்பினார்.

இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள் ஏன், எதற்காக போட்டியில் இருந்து சுரேஷ் ரைனா போட்டியில் இருந்து விலகினார் என்ற சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பினர். இதற்க்கு பதிலளிக்கும் விதமாக சுரேஷ் ரைனா தான் சொந்த காரணங்களுக்காக போட்டியில் தொடர்ந்து விளையாட முடியாததால் இந்தியா திரும்பியதாக தெரிவித்து இருந்தார்..

இதை தொடர்ந்து இந்த சீசனில் சுரேஷ் ரைனா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.. சென்னையில் நடைபெற்று முடிந்த ஐ‌பி‌எல் ஏலத்தில் சுரேஷ் ரைனா மீண்டும் சென்னை அணியில் சேர்க்கபட்டார் என்ற செய்தி உறுதியானதும் அவரது ரசிகர்கள் உற்சாகமாகி இணையத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

IPL 2021 Schedule: சி‌எஸ்‌கே முதல் மேட்ச் யாருடன் தெரியுமா?

இதை தொடர்ந்து ஐ‌பி‌எல் 2021 போட்டிகளுக்கான அட்டவணையை நேற்று பி‌சி‌சி‌ஐ அதிகார்பூர்வமாக வெளியிட்டது. அந்த அறிவிப்பில் குறிப்பிட்டு இருப்பது வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ஐ‌பி‌எல் போட்டிகள் ஆரம்பித்து மே 30 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளது..

இதன் அடிபடையில்,இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டிகள், தேதிகளையும் வெளியிட்டுள்ளனர்..அதன் முழு விவரம் பின்வருமாறு:

10-ஏப்ரல் -21 சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

16-ஏப்ரல் -21 சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்

19-ஏப்ரல்-21 ராஜஸ்தான் ராயல்ஸ்

21-ஏப்ரல் -21 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

25-ஏப்ரல் -21 ராயல் சேலன்ஜர்ஸ் பெங்களூரு

28-ஏப்ரல்-21 சன் ரைசேஸ் ஹைதராபாத்

01-மே -21 மும்பை இந்தியன்ஸ்

05-மே-21 vs ராஜஸ்தான் ராயல்ஸ்

07-மே-21 vs சன் ஹைத்ராபாத்

09-மே-21 கிங்ஸ் லெவன் பஞ்சாப்

12-மே -21 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

16-மே -21 மும்பை இந்தியன்ஸ்

21-மே -21 டெல்லி கேபிடல்ஸ்

23-மே -21 ராயல் சேலஞ்செர்ஸ் பெங்களூரு

IPL 2021 Schedule: சி‌எஸ்‌கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் மோதும் போட்டி வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி மும்பை வாங்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

Exit mobile version