IPL 2022 குஜ்ராத்தின் தொடர் வெற்றி நீடிக்குமா ?

IPL 2022 குஜ்ராத்தின் தொடர் வெற்றி நீடிக்குமா ? அல்லது சன் ரைசஸ் ஹைதராபாத் அணி குஜ்ராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்துமா ?

IPL 2022 குஜ்ராத்தின் தொடர் வெற்றி நீடிக்குமா ?
SRH vs GT

இன்றைய ஐ‌பி‌எல் போட்டியில் சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணியுடன் குஜ்ராத் டைட்டன்ஸ் அணி மோதுகின்றது. இந்த இரு அணிகள் மோதும் போட்டி இன்று இரவு 7.30pm மணிக்கு மும்பை மைதானத்தில் நடைபெறவுள்ளது..

ஐ‌பி‌எல் தொடரின் 15-வது சீசனின் 21 போட்டி சன் ரைசஸ் ஹைத்ராபாத் மற்றும் குஜ்ராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

நடப்பு ஐ‌பி‌எல் போட்டிகளில் குஜ்ராத் அணி இது வரை 3 போட்டிகளை எதிர்கொண்டு தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றியை பெற்று பலம் வாய்ந்த அணியாக உள்ளது..

கேப்டன் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜ்ராத் டைட்டன்ஸ் அணி ஐ‌பி‌எல் சீசன் 15-வது தொடரிலிருந்து புதியதாக சேர்க்கபட்ட இரண்டு அணிகளில் ஒன்று தான் குஜ்ராத் டைட்டன்ஸ்..

இந்த ஆண்டு முதல் ஐ‌பி‌எல் போட்டிகளில் விளையாட தொடங்கியுள்ள குஜ்ராத் அணி தனது முதல் சீசனிலே எதிர்கொண்ட 3 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று ஐ‌பி‌எல் தரவரிசை பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது..

குஜ்ராத் அணியுடன் விளையாடயுள்ள சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணி இது வரையில் 3 போட்டிகளில் களம் கண்டு 2 – இல் தோல்வி, 1 – இல் வெற்றி என்ற நிலையில் உள்ளது ..

சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணி தனது கடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதியதில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணிக்கு நடப்பு ஐ‌பி‌எல் போட்டியில் இதுவே முதல் வெற்றி என்பது குறிபிடத்தக்கது..

இருப்பினும், சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணியில் யாக்கர் கிங் நடராஜின் வேக பந்து வீச்சும் மற்றும் அணியின் சுழற் பந்து வீச்சாளர்களால் பலம் வாய்ந்த பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது.

ஹைத்ராபாத் அணி பேட்டிங்கில் இன்னும் சற்று கூடுதலாக அமைந்தால் அணியின் வெற்றிக பாதை எளிதாகிவிடும்.

கடந்த முறை சென்னையுடான போட்டியில் ஹைத்ராபாத் அணி 154 ரன்களை 2 விக்கெட்களை மட்டும் இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று உள்ளது..

இது ஹைத்ராபாத் அணியின் பேட்டிங் மேம்பாட்டு திறன் சற்று கூடுதலாகி இருப்பதையே காட்டுகிறது. எனவே குஜ்ராத் அணியுடான போட்டியில் இன்று கடும் சவால்கள் நிறைந்திருக்கும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது..

குஜ்ராத் அணியும் பந்து வீச்சில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படுவதால் இன்றைய போட்டியில் பரபரபிற்க்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது..

குஜ்ராத் அணியின் தொடர் வெற்றியை இன்றைய போட்டியில் சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணி முறியடிக்குமா என இன்றைய போட்டியில் தெரிந்துவிடும்.

Exit mobile version