IPLsports

KKRvsRCB: வெற்றி பெற போகும் அணி எது?

KKRvsRCB: வெற்றி பெற போகும் அணி எது? என்ற எதிர்பார்ப்பு இரு அணிகளின் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

KKRvsRCB: வெற்றி பெற போகும்
RCB Batting

KKRvsRCB: இன்றைய ஐ‌பி‌எல் போட்டியில் இரு அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி 7.30 மணி அளவில் ஆரம்பமானது.

இதில் முதலில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ‌பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது..

KKRvsRCB: வெற்றி பெற போகும் அணி எது?

இன்று நடைபெறும் ஐ‌பி‌எல் போட்டியானது சீசன் 13-இல் 28 வது லீக் போட்டியாகும் இநத் போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது.

தற்போது விளையாடி வரும் இரு அணிகள் ஐ‌பி‌எல் சீசன் 13 தரவரிசையில் மூன்று மற்றும் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

இதில் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பின்னுக்கு தள்ளி ஐ‌பி‌எல் சீசன் 13 பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்து விடும்.

இதன் காரணமாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ரசிகர்களுக்கு இப்போட்டியில் மிகவும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விவரம் (RCB Team)

ஐ‌பி‌எல் சீசன் 13 தரவரிசையில் பெங்களூரு அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4-இல் வெற்றி பெற்றி 2-இல் தோல்வியடைந்து 8 புள்ளிகளுடன் 4-ஆம் இடத்தில் உள்ளது.

இன்றைய போட்டியில் கேப்டன் விராட் கோலி தலைமையில் (RCB Captain)

ஆரோன் பிஞ்ச், டெவ்டுட் படிக்கல், டீ வில்லர்ஸ், வாஷிங்டன் சுந்தர், சிவம் டுபே, சிர்ஸ் மோரிஸ், இசுறு உடனா, நவ்தீப் சைனி, யூஜென்ற சாசல் மற்றும் மொஹம்மத் சிராஜ் ஆகியோர் இன்றைய போட்டியில் இடம் பிடித்துள்ளனர்.

(RCB) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் முதலாவதாக களம் இறங்கிய பிஞ்ச் நிதானமாக ஆடி அணிக்கு ரன் சேர்த்தனர். பிஞ்ச் 37 பந்துகளில் 47ரன்கலை எடுத்தார் அவர் அரை சதத்தை எட்டுவதற்கு முன் பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் பவுல்ட் ஆனார். IPLT20…

பின்னர் ஆடிய படிக்கல் 23பந்துகளில் 32 ரன்கலை அடித்து ஆண்ட்ரூ ரஸ்ஸல் வீசிய பந்தில் பவுல்ட் ஆகி ஆட்டத்தை விட்டு வெளியேறினார்..

இதை தொடர்ந்து ஆடிய ரோயல் சேலஞ்சரேஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் டீ வில்லர்ஸ் ஆகியோர் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் டீ வில்லர்ஸ் தனது அதிரடி ஆட்டத்தால் 33 பந்துகளில் 5ஃபோர்கள் மற்றும் 6 சிக்சர் உடன் 73 ரன்களை எடுத்தார்.

பெங்களூரு அணியில் அதிகபட்சமாக டீ வில்லர்ஸ் 73 ரன்களை குவித்தார் இறுதியில் 20ஓவர் முடிவுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2விக்கெட் இழப்புக்கு 194 ரன்களை எடுத்தது..

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR Team)

(KKR) கொல்கத்தா அணி சார்பாக பந்து வீசிய பிரசித் கிருஷ்ணா ஆண்ட்ரூ ரஸ்ஸல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றினர். 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தற்போது விளையாட உள்ளது.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !