IPLsports

LSG vs KKR : புதிய சாதனை படைத்த வீரர்கள்

LSG vs KKR : புதிய சாதனை படைத்த லக்னோ சூப்பர் கைண்ட்ஸ் அணி வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன..

LSG vs KKR : புதிய சாதனை படைத்த வீரர்கள்
de Kock & rahul

நேற்று இரவு 7.30 மணிக்கு ஐ‌பி‌எல் போட்டிகளின் 66-வது போட்டி லக்னோ சூப்பர் கைண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கும் இடையேயான போட்டி மும்பையில் நடைபெற்றது..

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

அதன் படி, லக்னோ கைண்ட்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான குய்டோன் டி கோக் மற்றும் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் ஆகியோர் களத்தில் இறங்கினர்..

ஆட்டத்தின் துவக்கத்திலே பந்துகளை பறக்கவிட்ட லக்னோ அணியின் இரு வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணியின் ரன்கள் விறுவிறுவென உயர்ந்தது..

இதில் குறிப்பாக குயின்டன் டி காக்கின் சூறாவளி ஆட்டத்தால் லக்னோ அணி 20 ஓவர்களுக்கு 210 ரன்களை எடுத்தது.

LSG vs KKR : புதிய சாதனை படைத்த வீரர்கள்
de Kock & rahul

ஆட்டத்தின் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நிலைத்து நின்று ஆடி புதிய சாதனையை படைத்துள்ளது குயின்டன் டி காக்கின் மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி..

குயின்டன் டி காக்கின் 70 பந்துகளில் 10 ஃபோர், 10 சிக்சர் என கொல்கத்தா அணி வீரர்கள் வீசிய பந்திணை பந்தாடிய டீ காக் 140 ரன்களை பெற்று அசத்தினார்.

இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல் 51 பந்துகளை எதிர்கொண்டு 68 ரன்களை பெற்றார்..

இதை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் மற்றும் அபிஜித் தோமர் ஆகியோர் ஆட்டத்தின் துவக்கத்திலே ஆட்டம் இழந்தனர்..

வெங்கடேஷ் ஐயர் ரன் ஏதும் அடிக்காமல் ஆட்டத்தை விட்டு வெளியேற அபிஜீத் தோமர் 8 பந்துகளுக்கு 4 ரன்களை மட்டுமே எடுத்தார். இவர்களை அடுத்து களமிறங்கிய அணியின் மற்ற வீரர்கள் மிக குறைந்த ரன்களிலே ஆட்டம் இழந்தனர்..

கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (50) 29 பந்துகளை விளையாடி 4 ஃபோர் 3 சிக்சர்கள் என அடித்து அரை சதத்தை எட்டினார்..

இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 208 ரன்களை எடுத்தது. இதன் மூலம் 2 ரன்கள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பறிகொடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி..

2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற லக்னோ சூப்பர் கைண்ட்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது..

கொல்கத்தாவுக்கு எதிராக நடைபெற்ற இன்றைய போட்டியில் ஐ‌பி‌எல் வரலாற்றிலே 3-வது அதிகபட்ச ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையயை குயின்டன் டி காக்கின் பெற்றார்.

ஐ‌பி‌எல்லில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் குயின்டன் டி காக்கின் 70 பந்துகளுக்கு 140 ரன்களை பெற்று மூன்றாவது இடத்திலும், கெயில் 175, மெக்கலம் 158 ரன்களையும் பெற்று முதல் இரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !