SRH vs MI 2021: வெளுத்து வாங்கிய மும்பை

SRH vs MI 2021: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி தற்போது நடந்து வருகிறது.

SRH vs MI 2021: வெளுத்து வாங்கிய மும்பை
Mumbai Indians

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான முயற்ச்சியில் மிகவும் நெருக்கடியான சூழலில் தவித்து வருகிறது.

ஏனெனில் இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தற்போது விளையாடி வரும் போட்டி தான் கடைசி போட்டி இதில் தோற்றுவிட்டால்

அவ்வளவு தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் இந்த சீசனை விட்டு மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேற வேண்டி இருக்கும்.

ஆகையால், இப்போட்டியில் எப்படியும் வெற்றி பெற்று விட வேண்டும் என்ற நோக்கில் போராடி வருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி, அதிலும் சாதாரணமான வெற்றி அல்ல அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நெட் ரேட்டில் கொல்கத்தாவை விட அதிக விகிதம் பெற வேண்டும்..

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தற்போது +0.587 நெட் ரேட்டை பெற்று நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் தற்போது வரை -0.048 நேட் ரேட்டுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.

இந்த போட்டியில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று +0.588 நெட் ரேட்டை நெருங்கினால் பிளே ஆஃப் சுற்றுக்கு வாய்ப்புகள் இருக்கும்..

தற்போது இந்த வெற்றி இலக்கை நோக்கி தான் மும்பை இந்தியன்ஸ் அணி சன் ரைசர்ஸ் ஹைத்ராபாத்துடன் மோதி வருகிறது..

SRH vs MI 2021

இந்த இரு அணிகள் மோதும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதை தொடர்ந்து முதலில் களமிறங்கிய மும்பை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகியோரது கூட்டணி துவக்கத்திலே அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார்கள்.

முதல் ஐந்து ஓவர்களிலே இஷான் கிஷானின் அதிரடி ஆட்டத்தால் அரை சதத்தை எட்டினார்கள்.

பின்னர் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 13 பந்துகளில் 18 ரன்களை பெற்று 5 வது ஓவர் 3 வது பந்தில் ஆட்டமிழந்தார்.

அப்போது அணியின் ஸ்கோர் 80 ரன்களுக்கு 1விக்கெட்டை இழந்தது இருந்தது. இவரை அடுத்து களமிறங்கிய ஹார்டிக் பாண்டியா 10 ரன்களிலும் கேய்ன் பொல்லார்ட் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்..

முதலில் களமிறங்கி ஆடிய இஷான் கிஷான் நிலைத்து நின்று ஆடி அரை சதம் அடித்தார். பின்னர் 9வது ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அப்போது இஷான் கிஷான் 32 பந்துகளில் 11 ஃபோர் மற்றும் 4 சிக்சர்களை விளாசி 84 ரன்களில் ஆட்டத்தை விட்டு வெளியேறினார்.

இவர்களை தொடர்ந்து சூர்யக்குமார் யாதவ் நிலைத்து நின்று ஆடி 40 பந்துகளில் 82 ரன்களை குவித்தார். இவர் 13 ஃபோர்கள் மற்றும் 3 சிக்சர்களை விளாசி மும்பை அணியின் ஸ்கோரை உயர்த்தினார்..

கடைசி ஓவர் வரை அடித்து ஆடிய சூர்யக்குமார் யாதவ் 19.4 ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்களை இழந்தது 235 ரன்களை குவித்துள்ளது.

MI vs SRH 2021: பிளே ஆஃப் செல்லுமா மும்பை

236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் தற்போது சன் ரைசஸ் ஹைத்ராபாத் அணி விளையாடி வருகிறது.

Exit mobile version