ரிட்டையர்ட் முறையில் வெளியேறிய அஸ்வின்

ரிட்டையர்ட் முறையில் அவுட் ஆகி ஆட்டத்தின் நடுவிலே வெளியேறிய ரவிசந்திரன் அஸ்வின் போட்டியின் நடுவே நடந்த ஒரு பரபரப்பு சம்பவம்..

ரிட்டையர்ட் முறையில் வெளியேறிய அஸ்வின்
Ravichandran Ashwin

ஐ‌பி‌எல் சீசன் 15-இன் 20-வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி,

நேற்று மும்பையில் உள்ள வாங்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது..

இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் தேவ்தட் படிக்கல் ஆகியோர் ஜோடி சேர்ந்து ஆடினர்.

ஜோஸ் பட்லர் 11 பந்துகளுக்கு 13 ரன்களிலும் தேவ்தட் படிக்கல் 29 பந்துகளுக்கு 29 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தார்கள்.

இவர்களை தொடர்ந்து அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 12 பந்துகளுக்கு 13 ரன்கள் எடுத்த நிலையில் ஜேசன் ஹோல்டர் வீசிய பந்தில் எல்‌பி‌டபில்யு ஆகி ஆட்டத்தை விட்டு வெளியேறினார்..

இவர்களை தொடர்ந்து, களமிறங்கிய ஷிம்ரோன் ஹெட்மியர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிககபட்சமாக 36 பந்துகளில் 59 ரன்களை விளாசினார். இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவருக்கு 165 ரன்களை எடுத்தது..

165 வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி வீரர்கள் ராஜஸ்தான் அணியினரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து மிக குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்..

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதல் பந்திலே டெக் அவுட் ஆனது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை தந்தது. இதை தொடர்ந்து லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்களை இழந்து தோல்வியுற்றது..

3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி பட்டியலில் தனது முதல் இடத்தை தக்க வைத்துள்ளது..

நேற்று நடைபெற்ற போட்டியில் சுவார்ஷ்ய நிகழ்வு என்னவென்றால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டாக களமிறங்கி 23 பந்துகளுக்கு 28 ரன்கள் அடித்த நிலையில் திடீரென ஆட்டத்தில் இருந்து வெளியேறினார்..

பின்னர் தான் விஷயம் தெரியவந்ததுள்ளது அஸ்வின் ரிட்டையர் முறையை பயன்படுத்தி ஆட்டத்தின் நடுவே வெளியேறியுள்ளார்.

இதன் மூலம் இவருக்கு அடுத்த படியாக இருக்கும் வீரர் களத்தில் இறங்கி விளையாடலாம் இது கிரிக்கெட் விதிமுறைகளுக்கு உட்பட்ட ஒன்று தான்..

ஐ‌பி‌எல் வரலாற்றில் ரிட்டையர் முறையில் அவுட் ஆன முதல் வீரரானார் ரவிசந்திரன் அஸ்வின். இது குறித்து அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில்,

கிரிக்கெட்டில் இந்த விதிமுறை இருப்பது ஏற்கனவே தெரியும், தற்போது அதனை ஒரு வியூகமாக பயன்படுத்த முதலிலே திட்டமிட்டதாககும் தெரிவித்தார்..

ஏற்கனவே அஸ்வின் 2019-இல் ராஜஸ்தான் வீரரான பட்லரை மான்கட் முறையில் அவுட் செய்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

Exit mobile version