கடைசி ஓவரில் தெறிக்கவிட்ட டேவிட் மில்லர்

கடைசி ஓவரில் தெறிக்கவிட்ட டேவிட் மில்லரின் ஆட்டத்தால் குஜ்ராத் டைட்டன்ஸ் அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது..

கடைசி ஓவரில் தெறிக்கவிட்ட டேவிட் மில்லர்
david miller

ஐ‌பி‌எல் சீசன் 15-இன் இன்றைய பிளே ஆஃப் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் குஜ்ராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த இரு அணிகளும் மோதும் போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் காடன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது..

இதில் டாஸ் வென்ற குஜ்ராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததால் பேட்டிங் செய்ய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது..

ராஜஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்‌வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் ஆட்டத்தின் துவக்கத்திலே யஷஸ்வி ஜெய்ஸ்‌வால் வெறும் 3 ரன்களில் ஆட்டம் இழந்தார்..

இதை தொடர்ந்து அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்து ஆடினார். இவரின் நிதமான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் உயர தொடங்கியது..

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் 47 ரன்கள் அடித்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அரை சதம் அடிக்க முடியாமல் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது..

இதனையடுத்து நிதானமாக ஆடி வந்த ஜோஸ் பட்லர் 56 பந்துகளில் 89 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவர்களை தொடர்ந்து அடுத்தடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்..

இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 188 ரன்களை எடுத்தது.. 189 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய குஜ்ராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொண்ட முதல் ஓவரிலே தனது துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான விருத்திமான் சாஹா ரன் ஏதும் அடிக்காமல் டெக் அவுட் ஆனார்..

குஜ்ராத் அணியின் மற்ற வீரர்களான சுப்மன் கில் 21 பந்துகளில் 35 ரன்களும், மேத்யு வேட் 30 பந்துகளில் 35 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

குஜ்ராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் 40 ரன்களை பெற்று சதம் அடிக்காமல் ஆட்டத்தை இழந்தார்..

இவர்களை தொடர்ந்து ஆடிய டேவிட் மில்லர் தனது அதிரடி ஆட்டத்தால் 38 பந்துகளில் 68 ரன்களை விளாசினார். இந்த போட்டியின் கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 16 ரன்கள்,

தேவைப்பட்ட நிலையில் முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர்களை தெறிக்கவிட்டார் டேவிட் மில்லர்..

இதையடுத்து 19.3 ஓவரிலே 3 விக்கெட்களை இழந்து 191 ரன்களை பெற்று குஜ்ராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் குஜ்ராத் டைட்டன்ஸ் அணி நேரடியாக ஐ‌பி‌எல் சீசன் 15-இன் இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

Exit mobile version