CSK vs KKR 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசன் 14 -இல் 38 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி அபுதாபியில் இன்று துவங்கியது.
இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணியளவில் தொடங்கபட்ட இப்போட்டியில் முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
CSK vs KKR 2021
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பில் முதலில் பேட்டிங் செய்ய சுப்மன் கில் வெங்கடேஷ் ஐய்யர் ஆகியோர் களமிறங்கினர்.
இதில் சுப்மன் கில் 9 ரன்களில் முதல் ஓவரிலே அவுட் ஆகி ஆட்டத்திலிருந்து வெளியேறினார்.
இவரை தொடர்ந்து வெங்கடேஷ் ஐய்யர் உடன் ஜோடி சேர்ந்து ஆட ராகுல் திரிபாதி களமிறங்கினார்.
ஆட்டத்தின் 5 வது ஓவரில் 18 ரன்களுடன் வெங்கடேஷ் ஐய்யர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
மேலும், கொல்கத்தா அணியில் நான்காவதாக களமிறங்கிய. அணியின் கேப்டன் மார்கன் 8(14) என மிக குறைந்த ரன்னில் அவுட் ஆனார்.
இவரை அடுத்து கொல்கத்தா அணியில் நிலைத்து நின்று ஆடிய ராகுல் திரிபாதி 33 பந்துகளில் 4 ஃபோர் 1 சிக்சர் என அடித்து அரை சதம் அடிக்காமல் 45 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
இவர்களை தொடர்ந்து தினேஷ் கார்த்திக் 26 ரன்களிலும் அண்ட்ரே ரஸ்ஸல் 20 ரன்களிலும் ஆட்டத்தை இழந்தனர்.
இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 171 ரன்களை பெற்றது.
இதனை அடுத்து 172 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.
முதலில் பேட்டிங் ஆட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாஃப் டு பிளசிஸ் ஆகியோர் களமிறங்கினர். இவர்கள் 8 ஓவர்கள் நான்கு அடித்து ஆடி அணிக்கு ரன்களை சேர்த்தனர்.
ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாஃப் டு பிளசிஸ் ஜோடி அரை சதம் அடித்தனர். பின்னர் 8 வது ஓவர் இரண்டாவது பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 74 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்தது.
இதை அடுத்து பாஃப் டு பிளசிஸ் உடன் ஜோடி சேர்ந்து ஆடிய மொயின் அலி இருவரும் சேர்ந்து அணியின் ரன் ரேட்டை உயர்த்தினார்கள்.
11 வது ஓவரில் பாஃப் டு பிளசிஸ் 43 ரன்களை எடுத்து இருந்த நிலையில் அரை சதம் அடிக்க முடியாமல் தனது விக்கெட்டை இழந்தார்.
இவரை தொடர்ந்து மொயின் அலி 16 ஓவரில் 32 ரன்களுடன் அவுட் ஆகி ஆட்டத்தை விட்டு வெளியேறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரவீந்திர ஜடேஜா 8 பந்துகளில் 2 ஃபோர் மற்றும் 2 சிக்சர்கள் .அடித்து அணிக்கு 22 ரன்களை சேர்த்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் மிக குறைந்த ரன்களில் அவுட் ஆகினர்.dc vs rr 2021: அசத்தலான வெற்றி பெற்ற டெல்லி
ஆட்டத்தின் இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தோற்கடித்தது.pbks vs srh 2021:125 ரன்களுக்கு சுருண்ட பஞ்சாப்