Last Updated on September 25, 2021 by Dinesh
today ipl match DC vs RR ராஜஸ்தானுக்கு 155 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி..
ஐபிஎல் சீசன் 14 -இல் 36 மற்றும் 37 வது போட்டிகள் இன்று நடைபெறுகின்றது. இன்றைய இரண்டு போட்டிகளில் முதலில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது.
(today ipl match DC vs RR )இந்த இரண்டு அணிகளும் மோதும் போட்டியானது ஷைக் ஜாயேத் மைதானத்தில் சுமார் 3.30 மணியளவில் தொடங்கபட்டது.
இதில் இரண்டு அணிகளின் கேப்டன்களான டெல்லியின் ரிஷப் பந்த் மற்றும் ராஜஸ்தான் அணியின் சஞ்சு சம்ஸோன் முன்னிலையில் டாஸ் போடபட்டது..
today ipl match DC vsRR
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆட களமிறங்கியது.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்கார்களான பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர்..
இதில் மூன்றாவது ஓவர் முதல் பந்திலே கார்த்திக் தியாகி வீசிய பந்தில் க்ளீன் போல்ட் ஆகி தனது விக்கெட்டை பறிகொடுத்தார் ஷிகர் தவான்.
இதனை அடுத்து ஷிகர் தவான் உடன் களமிறங்கி ஆடிய பிரித்வி ஷா நான்காவது ஓவர் முதல் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார்.
இப்படி ஆட்டத்தின் துவத்திலே டெல்லி கேபிடல்ஸ் அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தது டெல்லி அணியின் ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியது.
முதலில் அவுட் ஆன ஷிகர் தவான் 8 பந்துகளில் 8 ரன்கள் மற்றும் ஒரு ஃபோர் அடித்துள்ளார். மேலும் இவருடன் விளையாடிய பிரித்வி ஷா 12 பந்துகளில் 10 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இவர்கள் இருவரை தொடர்ந்து போட்டியை விளையாட ஷ்ரேயாஸ் ஐய்யர் மற்றும் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோர் அடுத்தடுத்து விளையாட களமிறங்கினர்.
போட்டியின் 11 வது ஓவர் முதல் பந்தில் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் 24 பந்துகளில் 2 ஃபோர்களை அடித்து வெறும் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இவரை தொடர்ந்து ஆடிய ஷ்ரேயாஸ் ஐய்யர் 13 வது ஓவர் இரண்டாவது பந்தில் 32 பந்துகளை எதிர் கொண்டு 1 ஃபோர் மற்றும் 2 சிக்சர்களை அடித்து 43 ரன்களை எடுத்து அரை சதம் அடிக்க முடியாமல் தனது ஆட்டத்தை இழந்தார்..
இவர்களை தொடர்ந்து ஆட களமிறங்கிய வீரர்களான ஷிம்ரோன் ஹெட்ம்யர் மற்றும் லலித் யாதவ் ஆகியோர் சொற் ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதில் ஷிம்ரோன் ஹெட்ம்யர் 16 பந்துகளில் 5 ஃபோர்களை அடித்து 28 ரன்களை அணிக்கு பெற்று தந்தார்.
மேலும் லலித் யாதவ் 15 பந்துகளை எதிர் கொண்டு 1 ஃபோர் மட்டுமே அடித்து 14 ரன்கள் மட்டுமே எடுத்தார். இவர்களை தொடர்ந்து விளையாடிய தமிழக வீரர் ரவிசந்திரன் அஷ்வின் 6 பந்துகளில் 6 ரன்களை அணிக்கு சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் முஷ்டாபிஜர் ரஹ்மான் மற்றும் சேட்டன் சகரியா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை எடுத்தனர்.
மேலும் கார்த்திக் தியாகி மற்றும் ராகுல் டெவாடிய ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைபற்றினர்.
இறுதியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 154 ரன்களை எடுத்தது. 155 ரன்களை இலக்காக கொண்டு ராஜஸ்தான் அணி தற்போது விளையாடி வருகிறது.