csk vs dc 2021 : டெல்லிக்கு 137 ரன்கள் டார்கெட்

csk vs dc 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி வெற்றி பெற 137 ரன்கள் தேவை..

csk vs dc 2021 : டெல்லிக்கு 137 ரன்களை டார்கெட்
csk vs dc

இன்று நடைபெறும் ஐ‌பி‌எல் சீசன் 14 இல் 50 வது போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகள் காலம் காண்கிறது.

தற்போது நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் பேட்டிங் ஆட களமிரக்கபட்ட்னர்.

இந்த இரு அணிகளும் மோதி கொள்ளும் போட்டி துபாய் இன்டர்நேஷனல் ஸ்டேடியமில் இன்று மாலை தொடங்கபட்டது..

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட இடம் பிடித்த வீரர்கள்.

கேப்டன் தோனி தலைமையில் ருதுராஜ் கெய்க்வாட், பாஃப் டு பிளசிஸ், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சச்சார், ஷர்டுல் தாக்கூர், ஜோஷ் ஹசெல்வூத், தீபக் சாகர் ஆகியோர் இன்றைய போட்டியில் இடம் பிடித்துள்ளனர்..

csk vs dc 2021

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் முதலில் பேட்டிங் செய்ய களமிறக்கபட்ட வீரர்கள்.

ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாஃப் டு பிளசிஸ் ஆகியோர் கூட்டணி 2 ஓவர்களிலே உடைந்தது.

இரண்டாவது ஓவர் 4 வது பந்தில் சென்னை அணியின் முதல் விக்கெட்டாக பாஃப் டு பிளசிஸ் 8 பந்துகளில் 2 ஃபோர்களை அடித்து 10 ரன்களில் அவுட் ஆனார்.

பாஃப் டு பிளசிஸ் உடன் ஜோடி சேர்ந்து ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 4 வது ஓவர் 4 வது பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அப்போது இவர் 13 பந்துகளை எதிர் கொண்டு 2 ஃபோர்களை அடித்து 13 ரன்களை எடுத்து இருந்தார்.

ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய மொயின் அலி 8 பந்துகளில் வெரும் 5 ரன்களை எடுத்து அக்ஸர் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டத்தை விட்டு வெளியேறினார்.

மொயின் அலியை தொடர்ந்து சென்னை அணியின் 4 வது விக்கெட்டாக ராபின் உத்தப்பா 19 பந்துகளில் 1 ஃபோர் உடன் 19 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவர்களை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அம்பத்தி ராயுடு நிலைத்து நின்று ஆடி 43 பந்துகளில் 5 ஃபோர்கள் மற்றும் 2 சிக்சர்களை விளாசி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரன்களை உயர்த்தினார்.

சென்னை அணியின் கேப்டன் தல தோனி 27 பந்துகளில் 18 ரன்களை அடித்த நிலையில் ஆவேஷ் கான் வீசிய பந்தில் ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்து அணியின் 5 வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.CSK vs KKR 2021: த்ரில் வெற்றி பெற்ற சி‌எஸ்‌கே

இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு நிலைத்து நின்று ஆடியதில் 43 பந்துகளில் (55) அரை சதம் எட்டினார்..

இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 136 ரன்களை எடுத்து உள்ளது.

137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணி விளையாடி வருகிறது.

Exit mobile version