dc vs rr 2021: அசத்தலான வெற்றி பெற்ற டெல்லி

dc vs rr 2021: டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணியகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் அசத்தல் வெற்றி பெற்றது டெல்லி கேபிடல்ஸ்…

dc vs rr 2021: அசத்தலான வெற்றி பெற்ற டெல்லி
dc vs rr

இன்றைய ஐ‌பி‌எல் போட்டிகளில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டியானது இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணியளவில் தொடங்கியது.

ஐ‌பி‌எல் போட்டிகளில் 36 வது போட்டியாக ஷெய்க் ஜாயேத் மைதானத்தில் இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

dc vs rr 2021

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து டெல்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

முதலில் ஆடிய டெல்லி அணி வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அந்த அணியின் வீரர் ஷ்ரேயாஸ் ஐய்யர் அதிகபட்சமாக 43 ரன்களை டெல்லி அணிக்கு பெற்று தந்தார்.

இதனை அடுத்து டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை பறிகொடுத்து 154 ரன்களை எடுத்தது.

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட் தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

முதல் மற்றும் இரண்டாவது ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்கார்களான லியம் லிவின்ஸ்டோன் மற்றும் யாஷஷ்வி ஜைஷ்வல் ஆகியோர் மிக சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது. இதில் லியம் லிவின்ஸ்டோன் 3 பந்தில் 1 ரன்னும் யாஷஷ்வி ஜைஷ்வல் 4 பந்தில் 5 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டத்தை விட்டு வெளியேறினர்.

இவர்களை அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரது கூட்டணி 4 வது ஓவரில்

டேவிட் மில்லர் 10 பந்துகளை எதிர் கொண்டு 7 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்த போதும் நிலைத்து ஆடினார் சஞ்சு சாம்சன்

ராஜஸ்தான் அணியின் டேவிட் மில்லர் விக்கெட்டிற்க்கு பிறகு களமிறங்கிய மஹிபால் லோம்ரோர் 24 பந்துகளை எதிர் கொண்டு 19 ரன்களை எடுத்து அவுட் ஆகினார்.

அப்போது ராஜஸ்தான் அணி 10 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்தது.

இருப்பினும் சஞ்சு சாம்சன் களத்தில் நிலைத்து நின்று தனது ஆட்டத்தை விளையாடி வந்தார்.

மஹிபால் லோம்ரோர் விக்கெட்டை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதி வரை ஆட்டமிழக்காமல் தொடர்ந்து விளையாடி வந்த சஞ்சு சாம்சன் 53 பந்துகளில் 8 ஃபோர் மற்றும் 1 சிக்சரை அடித்து 70 ரன்களை ராஜஸ்தான் அணிக்கு பெற்று தந்தார்.

ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 70 ரன்களை அடித்தார். இருப்பினும் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 121 ரன்களை மட்டும் எடுத்திருந்தது.

இதனால் 33 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ரயால்ஸ் அணியை டெல்லி கேபிடல்ஸ் அணி எளிதாக வென்றது.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் ரவிசந்திரன் அஷ்வின், அக்சர் பட்டேல், காகிசோ ரபாடா, ஆவேஷ் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைபற்றினர்.

அன்ரிச் நோர்டஜே சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களை கைபற்றியுள்ளார். இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஷ்ரேயாஸ் ஐய்யர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யபட்டார்.

Exit mobile version