RCB vs RR 2021:பந்து வீச்சை தேர்வு செய்த ஆர்சிபி
Last Updated on September 29, 2021 by Dinesh
RCB vs RR 2021: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது.

இன்று ஐபிஎல் சீசன் 14 -இல் 43 வது போட்டி தற்போது துபாய் இன்டர்நேஷனல் ஸ்டேடியமில் சற்று முன்னர் தொடங்கியது.
இப்போட்டியில் துவக்கத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் கேப்டன்கள் முன்னிலையில் டாஸ் போடபட்டது.
இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களம் காண இருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.
RCB vs RR 2021
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் விராட் கோஹ்லி இந்த போட்டியில் தனது பேட்டிங் குறித்து மிகவும் நம்பிகையுடன் இருப்பதாகவும், தன்னால் முடிந்த பங்களிப்பை இந்த போட்டியில் வெளிபடுத்த போவதாகவும் தெரிவித்தார்.
இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ஒரு சிறிய மாற்றம் செய்துள்ளனர்.
அதாவது முந்தைய போட்டியில் விளையாடிய கைல் ஜேமிசனுக்கு பதிலாக ஜார்ஜ் கார்டன் இன்றைய போட்டியில் களமிறக்கபடுகிறார்.
இந்த லீக்கின் இரண்டாம் கட்ட தொடக்கத்திலிருந்து ஒரு பதட்டமான தொடக்கமாக இருந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு.
ஆனால் இவர்கள் கடந்த போட்டியில் மும்பைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து இந்த சீசனில் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்திற்க்கு முன்னேறி நிம்மதி பெரும் மூச்சிவிட்டனர்.
ஏற்கனவே பிளே ஆஃப் சுற்று கிட்டதட்ட தகுதி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கபடுகிறது..
இதற்க்கும் முன் கடந்த செவ்வாய்கிழமைகளில் நடைபெற்ற போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளிகள் விளையாடிய அந்தந்த போட்டிகளில் வெற்றி பெற்றதால் ஐபிஎல் சீசன் 4-இல் புள்ளி பட்டியலில் முன்னேற்றம் நடந்தது.
இதை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல் அணியுடன் நடைபெற்ற போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியுற்றது.
ஐபிஎல் சீசன் 14 -இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது ஏழாவது இடத்தில் உள்ளது. இன்று விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
KKRvsRCB: வெற்றி பெற போகும் அணி எது?
எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக நடைபெறும் என்பதில் சந்தேகம் இல்லை..
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
விராட் கோலி(கேப்டன்), தேவதூத் படிக்கல், ஸ்ரீகர் பாரத், க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லிர்ஸ், டான் கிறிஸ்டியன், ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் பட்டேல், ஜார்ஜ் கார்டன், முகம்மது சிராஜ், யுஷ்வேந்த்ர ஷாகல் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
எவின் லூய்ஸ், யஷஸ்வி ஜெய்ஷ்வால், சஞ்சு சாம்சன், லியாம் லிவிங்ஸ்டோன், மஹிபாலின் லோம்ரோர், ரியான் பராக், ராகுல் டெவாடிய, சேதன் சக்காரிய, முஸ்டாஃபிஃஜ்ர், கார்த்திக் தியாகி ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.