தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய அமலா பால்

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய அமலா பால் தான் தயாரிக்கும் முதல் திரைபடத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்…

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய அமலா பால்
amala paul

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை அமலா பால் தான் சொந்தமாக உருவாக்கிய தயாரிப்பு நிறுவனத்தை அவர் பிறந்தநாளன்று அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அது மட்டுமின்றி கூடவே அமலா பால் முதன் முறையாக தயாரிக்கும் கடாவர் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரையும் இன்று வெளியிட்டார்.

இது குறித்து தயாரிப்பாளர் நடிகை அமலா பால் கூறுகையில் நான் திரைதுறைக்கு வந்து இதுவரை 12 வருடங்கள் (144 மாதங்கள் மற்றும் 4380 நாட்கள்) ஒரு நடிகையாக திரைதுறையில் இருக்கிறேன்.

நான் பயணித்த இந்த 12 ஆண்டுகள் மிகவும் செழுமையும், வெகுமதியும் கொண்டது. இப்பொழுது நான் ஒரு புதிய வேலையில் இறங்குவதற்க்கு சிறகுகளை வளர்த்துள்ளேன் நான் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறேன் என தெரிவித்துள்ளார்.

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய அமலா பால்

தற்போது அறிமுகம் செய்யபட்டுள்ள amala paul productions நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கடாவர் திரைபடத்தின்

பஸ்ட் லுக்கில் நடிகை அமலா பால் பிணங்களுக்கு நடுவே சவ கிடங்கில் அமர்ந்து சாப்பிடுவதை போன்று பஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடபட்டுள்ளது.

கடாவர் திரைப்படம் ஒரு தடவியல் அறுவை சிகிச்சை நிபுணரை விசாரணைக்காக ஒரு போலீஸ் அதிகாரி அழைத்துவரப்படும் கதையினை மையமாக கொண்டு கடாவர் திரைப்படம் உருவாகியுள்ளது.

இத்திரைபடத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமல்லாது இதனுடன் மோஷன் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் பஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது சமூக வலைதல பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வெறித்தனமான வரிகளுடன் வா சாமி பாடல்

கடாவர் திரைபடத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்ட நடிகர் அக்ஷய் குமார் எனக்கு மிகவும் பிடித்த வகைகளில் பிடித்த ஒன்று

இந்த த்ரில்லர் நிச்சயமாக சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துகள் அமலா பால் என குறிபிட்டுள்ளார்.

மேலும், அவர் அமலா பால் பிறந்த நாளில் அவரது முதல் தயாரிப்பில் உருவாகும் கடாவர் திரைபடத்தினை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன் என ட்வீட் செய்து உள்ளார். தல கோதும் ஜெய் பீம் படத்தின் புதிய பாடல்

இத்திரைபடத்தை அனூப் பனிக்கர் இயக்குகிறார் எடிட்டராக சன் லோகேஷ் இசையமைப்பாளராக ரஞ்சின் ராய் கதை அபிலாஷ் பிள்ளை ஆகியோர் கடாவர் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

Exit mobile version