beast :வெளிநாட்டு உரிமத்தை கைபற்றிய நிறுவனம்
Last Updated on March 24, 2022 by Dinesh
beast :வெளிநாட்டு உரிமத்தை கைபற்றிய நிறுவனம் தற்போது இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது…

பீஸ்ட் திரைபடத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, யோகி பாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்க்ஸ்லே உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்..
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைபடத்திற்க்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் இசையமைக்கிறார்.
மேலும் படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் எடிட்டராக ஆர். நிர்மல் ஆகியோர் இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்..
பீஸ்ட் படத்தில் இது வரை பஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு லிரிகள் வீடியோ பாடல்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து பாடல் யுட்யூப் வலைதளத்தில் 200 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து தற்போது வரை சாதனை புரிந்து வருகின்றது..தளபதி விஜய் நடனத்தில் கலர்ஃபுல்லான பாடல் இதோ
இரண்டாவது பாடல் ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையில் இப்பாடலை 25 மில்லியனுக்கும் அதிகாமானோர் இணையத்தில் கண்டு ரசித்துள்ளனர்…. இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் beast திரைப்படம் சென்சார் போர்டில் U/A Certificate பெற்றுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின.. ஜாலியோ ஜிம்கானா பீஸ்ட் இரண்டாவது பாடல்
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பீஸ்ட் திரைபடத்தின் புது புது அப்டேட்கள் நாளுக்கு நாள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன..
அந்த வகையில் இன்றும் ஒரு புதிய அறிவிப்பு வெளியாகி தளபதி விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது..
தற்போது வெளியாகியிருக்கும் இந்த புதிய அறிவிப்பில் பீஸ்ட் திரைபடத்தின் வெளிநாட்டு திரையரங்கு உரிமையை பிரபல தயாரிப்பு மற்றும் விநியோகஸ்தர் நிறுவனமான ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் பெற்றுள்ளது..
பீஸ்ட் படத்தின் திரையரங்கு உரிமையை பொறுத்தவரை உதயநிதி ஸ்டாலினின் ரெட் மூவி தமிழகத்திலும், வெளிநாட்டு திரையரங்கு உரிமையை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனமும் கைபற்றியுள்ளது…
தற்போது இந்த அறிவிப்பானது இணையத்தில் வேகமாக பரவி ட்ரெண்ட் ஆகி வருகிறது.