தளபதி விஜய் நடனத்தில் கலர்ஃபுல்லான பாடலாக ஜாலியோ ஜிம்கானா பாடல் இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட்ங்கில் கலக்கி வருகிறது..

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைபடத்தின் முதல் பாடல் ஹலமதி ஹபிபோ (அரபிக் குத்து )
பாடல் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி பல 197 மில்லியன் பாரவையாளர்களை கடந்து சாதனைகளை படைத்து வருகிறது..
பீஸ்ட் படத்தின் முதல் பாடலான அரபிக் குத்து பாடலை அனிருத் இசையில் நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி இருக்கும்
இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் மற்றும் பாடகி ஜோனிதா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர்..
அரபிக் குத்து பாடல் வெளியான நாள் முதிலிருந்து இன்று வரை யுட்யூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட்டில் உள்ளது அரபிக் குத்து பாடல். இப்பாடலை தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகள் மட்டுமின்றி,
ரசிகர்களும் தளபதி விஜய் போன்று அரபிக் குத்து பாடலுக்கு ஆடிய நடனத்தை போன்றே அவர்களும் இப்பாடலுக்கு நடனம் ஆடி அதனை தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்தது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
பீஸ்ட் திரைபடத்தின் முதல் பாடல் அரபிக் குத்து மிக பெரிய ஹிட் அடித்து இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன் பீஸ்ட் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டது சன் பிக்சர்ஸ்..
இதன் கூடவே விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் மற்றுமொரு இன்ப செய்தியை வெளியிட்டு இருந்தது சன் பிக்சர்ஸ்..
அதாவது பீஸ்ட் படத்தின் இரண்டாவது பாடலான ஜாலியோ ஜிம்கானா பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார் என்பது தான் அந்த புதிய அப்டேட்..
இந்த அறிவிப்புடன் ஜாலியோ ஜிம்கானா பாடலின் ப்ரோமோவையும் வெளியிட்டு அசத்தி இருந்தது பீஸ்ட் படக்குழு.. பீஸ்ட் திரைபடத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு விஜய் குரலில்
ஜாலியோ ஜிம்கானா பாடல் உருவாகியுள்ளது என்ற இந்த அதிரடியான சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு பாடலின் மீதான கவனத்தையும், ஆர்வத்தையும் அதிகரித்து உள்ளது..
இன்று (19.03.2022) மாலை 6.00pm மணிக்கு பீஸ்ட் படத்தின் இரண்டாவது பாடல் ஜாலியோ ஜிம்கானா என்ற பாடல் வெளியாகும்
என சன் பிக்சர்ஸ் அறிவித்தபடி, ஜாலியோ ஜிம்கானா பாடலானது வெளியானது..
ரசிகர்களும் ஆர்வமுடன் எதிர்பார்த்த இந்த பாடல் இப்பொழுது இணையத்தில் படு வேகமாக பகிரப்பட்டு ட்ரெண்ட் ஆகி வருகிறது..
தளபதி விஜய் நடனத்தில் கலர்ஃபுல்லான பாடல் கீழே கொடுக்கபட்டுள்ளது கேட்டு மகிழுங்கள்…