தங்கலான் படபிடிப்பின் போது எதிர்பாராவிதமாக ஏற்பட்ட விபத்தால் நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டுள்ளது என வெளியான செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சீயான் விக்ரம்.
இவர் சினிமா மீது கொண்ட தீராத காதல் காரணமாக தான் நடிக்கும் கதாபாத்திரங்கள் மிகவும் கடினமாக இருந்தாலும்
அதை பற்றி துளியும் கண்டுகொள்ளாமல் படத்தின் கதைக்காக தன் உடலை வருத்தி கொள்வதிலும்,
உடல் எடையை கதைக்கு ஏற்றபடி குறைப்பதும் பின் ஏற்றுவதும் என சினிமா உலகை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்..
அந்த வகையில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஐ படத்தில் ஒரு பகுதியில் உடை எடையை குறைத்து ஒரு கடிமான கதாபாத்திரத்திலும், மற்றொரு பகுதியில் பாடி பில்டர் கதாபாத்திரத்திலும் நடித்து தமிழ் சினிமாவையே ஆச்சர்ய பட வைத்தார் சீயான் விக்ரம்..
சீயான் விக்ரமின் அசுரதனமான நடிப்புக்கு தீனி போடும் வகையில் சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து மிக வெற்றி பெற்ற பொன்னியின் செல்வன் பாகம் 1, பொன்னியின் செல்வன் பாகம் 2 ஆகிய படங்களில் ஆதித்ய கரிகாலனாக சீயான் விக்ரம் நடிப்பில் மிரட்டியிருப்பார்..
அதனை தொடர்ந்து, தற்போது இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சீயான் விக்ரம் (chiyaan vikram ) இந்த படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடிக்கின்றனர்..
தங்கலான் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ. ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.
ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையில் சமீபத்தில் தான் தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி தங்கலான் படத்தில் விக்ரமின் தோற்றம் பலரையும் ஆச்சர்யபட வைத்தது மட்டுமின்றி படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து காணபாடுகிறது..
தற்போது தங்கலான் திரைப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பை நெருங்கி வந்து கொண்டிருக்கும் வேலையில் இந்த திடீர் விபத்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
சென்னையில் நேற்று தங்கலான் சூட்டிங் தொடங்குவதற்க்கு முன் ஒத்திகை நடைபெற்றுள்ளது.
இந்த ஒத்திகையின் போது எதிர்பாராவிதமாக நடிகர் விக்ரம் கீழே விழுந்ததில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது..
இதனை தொடர்ந்து, பதறியடித்து போன படக்குழுவினர் நடிகர் விக்ரமை மருதுவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மருத்துவர்கள் நடிகர் விக்ரமுக்கு சிகிச்சை அளித்து நன்கு ஓய்வெடுக்கமாரு அறிவுறுத்தி உள்ளனர்.
இதனால் உடல்நலம் குணமாகும் வரை நடிகர் விக்ரம் படபிடிப்புகளில் கலந்து கொள்ள மாட்டார் என அவரின் மேலாளர் தெரிவித்துள்ளார்.