மீண்டும் இணையும் தனுஷ் மாரி செல்வராஜ் வெற்றி கூட்டணி உற்சாகத்தில் தனுஷின் ரசிகர்கள்…
![dhanush new movie](https://i0.wp.com/www.natshathiram.com/wp-content/uploads/2023/04/dhanush-new-movie.jpg?resize=700%2C400&ssl=1)
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2021-இல் திரைக்கு வந்து மிக பெரிய வரவேற்ப்பையும், வெற்றியையும் பெற்ற திரைப்படம் தான் கர்ணன்..
இந்த படத்தில் தான் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணி முதன் முதலாக இணைந்தது. கர்ணன் திரைபடத்தில் தனுஷின் கதாபாத்திரமும், நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது மட்டுமின்றி படத்தின் வசூலையும் குவித்து தந்தது கர்ணன் திரைப்படம்..
அதன் பிறகு, மீண்டும் அடுத்த படத்தில் தனுஷ் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் கூட்டணி இணையும் என ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா வட்டாரத்திலும் மிகவும் எதிர்பார்க்கபட்டது..
ஆனால், இயக்குனர் மாரி செல்வராஜ் உதய்நிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷை வைத்து மாமன்னன் திரைபடத்தை இயக்கி வந்தார். நடிகர் தனுஷும் தனக்கு பெண்டிங்கில் இருந்த படங்களை நடிக்க கவனம் செலுத்தி அந்த படங்களிலும் நடித்து முடித்துவிட்டார்..
இருவரும் தங்களுக்கு ஏற்கனவே கமிட்டான படங்களை முடிப்பதற்காக கவனம் செலுத்தி வந்த நிலையில் அதனை தற்போது நிறைவு செய்தவுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இப்போது மீண்டும் தனுஷ் மாரி செல்வராஜ் கூட்டணி இணைந்துள்ளது..
நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டேர்பார் பில்ம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து மாரி செல்வராஜ் தனுஷுடன் இரண்டாவது முறையாக இணையும் படத்தினை தயாரிக்கிறது..
இத்திரைபடம் தனுஷ் நடித்ததிலே மிக பெரிய பொருட்செலவில் தயாராகும் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர் நடிகைகள் இணையவுள்ளதாகவும் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்களும் இணைவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது..
மேலும், இந்த படத்தின் பல முக்கிய அறிவிப்புகள் வரும் காலங்களில் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.