“தொடங்கியது தனுஷின் புதிய படம்” இயக்குனர் யார் தெரியுமா?

நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பு பூஜை ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது..

dhanush movies tamil list
dhanush

தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் தனுஷின் சமீபத்திய படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது..

கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்வு செய்து நடித்து வரும் தனுஷ் படத்தின் கதாபாத்திரம் எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதனை தனக்கே உரித்தான எதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தி சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்..

அந்த வகையில், அசுரன், கர்ணன்,சமீபத்தில் வெளிவந்த நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் தனுஷின் நடிப்பு திறன் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா வட்டாரத்திலும் பலரது பாராட்டுக்களையும், வரவேற்ப்பையும் பெற்றது..

இந்த படங்களை தொடர்ந்து, தற்போது தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் vaathi படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். .இந்நிலையில் தனது அடுத்த படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் நடைபெற்று அதன் புகைபடங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது..

பெயரிடபடாத தனுஷின் புதிய படத்தினை தெலுங்கில் பிரபல இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா தயாரிப்பு நிறுவனம் சார்பில் சுனில் நரங் மற்றும் புஷ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்..

புதியதாக இணைந்திருக்கும் தனுஷ் மற்றும் சேகர் கம்முலா கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக எடுக்க உள்ளனர்..

மேலும் இந்த படத்தில் நடிப்பதற்காக சினிமா துறையில் பல்வேறு மொழிகளில் நடிக்கும் நடிகர் நடிகைகளை நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன..

படத்தின் பல புதிய அப்டேட்கள் இனி வரும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Exit mobile version