ஐஸ்வர்யாவிற்க்கு தனுஷ் போட்ட ட்வீட்
Last Updated on March 17, 2022 by Dinesh
ஐஸ்வர்யாவிற்க்கு தனுஷ் போட்ட ட்வீட் தற்போது சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகி பரவி வருகிறது..

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினி காந்த் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர்..
பின்னர், திடீரென்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் தங்களது திருமண வாழ்க்கையில் இருந்து விலகுவதாக இருவரும் தங்களது ஒரே மாதிரியான அறிக்கைகளை அவரவர் பயன்படுத்தும் சமூக வலைத்தள பக்கங்களில் பகிருந்து கொண்டனர்..
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இந்த திடீர் விவாகரத்து சினிமா வட்டாரத்தில் மட்டுமல்ல ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது..
இதை தொடர்ந்து, இருவரும் தனி தனி பாதையில் செல்ல முடிவு எடுத்து இருந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது படபிடிப்பு பணிகளில் கவனம் செலுத்த தொடங்கியிருந்தார்..
மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தனது இயக்குனர் பணியை சுமார் 9 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் துவக்கி இருந்தார்..
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இயக்கத்தில் இதுவரை தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் 3 திரைபடத்தையும்,
கௌதம் கார்த்திக் மற்றும் ப்ரியா ஆனந்த் நடிப்பில் வெளிவந்த வை ராஜா வை ஆகிய திரைபடங்களை இயக்கியுள்ளார்..
இது மட்டுமின்றி, கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த சினிமா வீரன் என்ற ஆவண படத்தையும் இவர் இயக்கியுள்ளார். இதை தொடர்ந்து தற்போது மீண்டும் இயக்கத்தில் களம் இறங்கி இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பயணி என்ற பாடல் வீடியோ ஒன்றை இயக்கியுள்ளார்..
Payani music album
மூன்று மொழிகளில் தயாராகியுள்ள (payani music album) பயணி வீடியோ பாடலை பாடலாசிரியர் விவேகா எழுத்தியுள்ளார். இந்த பயணி மியூசிக் ஆல்பத்திற்க்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் இசையமைத்துள்ளார்..
தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிய இப்பாடலை தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மாலை தனது சமூக வலைதளத்தில் இதனை வெளியிட்டார்..
ரஜினிகாந்த் வாழ்த்து
9 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்கி இருக்கும் என் மகள் ஐஸ்வர்யா இயக்கிய பயனி இசை வெளியீட்டில் மகிழ்ச்சி நீங்கள் எப்போதும் சிறப்பாக இருக்க விரும்புகிறேன்.
கடவுள் ஆசீர்வதிப்பார் உங்களை நேசிக்கிறேன் என ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவிற்க்கு வாழ்த்துகளை தெரிவித்து பயனி பாடல் வீடியோவை வெளியிட்டார்..
இதை போன்று தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜூன் இந்த பாடலை வெளியிட்டுள்ளார். மலையாளத்தில் மலையாள சசூப்பர் ஸ்டார் மோகன் லால் இந்த பாடலை வெளியிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளார்..
தனுஷ் வாழ்த்து
ஐஸ்வர்யாவிற்க்கு தனுஷ் போட்ட ட்வீட், நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை டேக் செய்து வாழ்த்துக்கள் தோழி கடவுள் அருள் புரிவாராக என ட்வீட் செய்து பயனி மியூசிக் ஆல்பத்தை தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்..
இதற்க்கு பதில் அளிக்கும் விதமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷ் டேக் செய்து நன்றி தனுஷ் godspeed என தெரிவித்துள்ளார்…