தேசிய விருதுகளை தட்டி தூக்கிய யோகி பாபு நடித்த மண்டேலா
Last Updated on July 22, 2022 by Dinesh
நடிகர் யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை பெற்று அசத்தி உள்ளது..

அறிமுக இயக்குனர் மடோன்னே அஸ்வின் இயக்கிய மண்டேலா திரைபடத்தில் யோகி பாபு, ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன், ஜி.எம். சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்த இருந்தனர்..
YNOT Studios தயாரிப்பில் இசையமைப்பாளர் பரத் ஷங்கர் இசையில் தயாரான மண்டேலா திரைப்படம் கடந்த 2021 ஏப்ரல் மாதம் வெளியானது..
இதை தொடர்ந்து பிரபல ஓடிடி தளமான நெட்ப்லிக்ஸ் தளத்தில் மண்டேலா படம் வெளியானது.. இப்படத்தின் இயக்குனர் மடோன்னே அஸ்வின் இதற்க்கு முன் குறும் படங்களை இயக்கி வந்தார்..
தான் இயக்கும் குறும் படங்கள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்த மடோன்னே அஸ்வின் தன்னுடைய முதல் படமான மண்டேலா திரைப்படம் விமர்சன ரீதியாக மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது..
இப்படத்தில் கதாநாயகனாக நடித்த யோகி பாபு, இதற்க்கு முன் நடித்த படங்களில் நகைசுவையை மையமாக கொண்டு நடித்து வந்தார்.
ஆனால் இப்படத்தில் முடி திருத்தம் செய்யும் தொழிலாளியாக தன் எதார்த்தமான நடிப்பின் மற்றுமொரு அம்சத்தை முற்றிலுமாக இந்த படத்தில் வெளிபடுத்தி இருப்பார்..
ஒவ்வொரு தனி நபரின் வாக்குகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என தெளிவுபடுத்தும் படமாக உருவாக்கிய இயக்குனர் மடோன்னே அஸ்வினுக்கும்,
படத்தில் மிகவும் நேர்த்தியாக நடித்து இருந்த நாயகன் யோகி பாபுவிற்க்கும் அனைத்து தரப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது..
இந்நிலையில், தற்போது 68வது தேசிய விருதுகள் பட்டியலில் மண்டேலா திரைப்படம் 2 தேசிய விருதுகளை தட்டி சென்றுள்ளது..
மண்டேலா திரைப்படம் பெற்று 2 தேசிய விருதுகள், சிறந்த வசனத்திற்கான விருது மற்றும் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதையும் பெற்றுள்ளது.