சிவகார்த்திகேயன் படத்தின் பஸ்ட் லுக் இதோ
Last Updated on November 10, 2021 by Dinesh
சிவகார்த்திகேயன் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன், வினய்,யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்த டாக்டர் திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து மிக பெரிய வரவேற்பை பெற்றது.
டாக்டர் திரைபடத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் lyca production உடன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் டான்.
இப்படத்தினை சிவகார்த்திகேயன் புரொடாக்க்ஷன் (sivarkarthikeyan productions ) பேனரின் கீழ் இத்திரைபடத்தினை லைகா புரொடாக்க்ஷன் சுபாஷ்கரன் உடன் இணைந்து தயாரிக்கிறார்..
மேலும், இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்புகள் கடந்த பிப்ரவரி மாதம் படக்குழுவினரால் அதிகாரபூர்வமாக வெளியிடபட்டது..
இத்திரைபடத்தில் சிவகார்த்திகேயன் உடன் மீண்டும் இரண்டாவது முறையாக நடிகை ப்ரியங்கா மோகன் இணைந்து நடிக்கிறார். இதற்கான அறிவிப்பை டான் படத்தின் படக்குழு அறிவித்தது.
இதற்க்கு முன் சிவகார்த்திகேயன் மற்றும் ப்ரியங்கா மோகன் ஆகியோரது காம்போ டாக்டர் படத்தில் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருவதால்
இவர்கள் இருவரது காம்போவை மீண்டும் காண ரசிகற்காளிடையே தற்போது ஆர்வம் அதிகரித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் துவக்கத்தில் பூஜையுடன் தொடங்கிய டான் திரைபடத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரகணி, சூரி, முனிஸ்காந்த், காளி வெங்கட், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதை தொடர்ந்து, டான் படத்தின். முதல் மற்றும் இரண்டாம் கட்ட சூட்டிங் பணிகள் சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று முடிந்தது.
தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் கடந்த செப்டெம்பர் மாதம் தொடங்கபட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது சிவகார்த்திகேயன் தனது டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக தனது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய ரசிகர்களுக்கு அறிவித்து உள்ளார்.
FIR ஓடிடி ரிலீஸ் குறித்து விஷ்ணு விஷால்
அதில் அவர் குறிபிட்டுள்ளதாவது அடாது மழையிலும் விடாது டப்பிங் என தெரிவித்தார்.
மேலும் அதில் அவர் குறிப்பிட்டு கூறியிருப்பது நிறைய உணர்ச்சிகள், என் கல்லூரி நாட்களை மீண்டும் பார்த்தேன், இந்த பயணம் பிடித்திருந்தது என குறிபிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் படத்தின் பஸ்ட் லுக் இதோ
இதனிடையே தற்போது இப்படத்தின் பாஸ்ட் லுக் போஸ்டரை டான் படத்தின் படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டட்டுள்ளது
டான் திரைப்படம் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே நடக்கும் சுவாரஸ்யங்களை சொல்லும் படமாக அமைந்திருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கபடுகிறது.
இதனை உறுதி செய்யும் விதமாக இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் மாணவர்கள் கூடுகிறார்கள்
சிவகார்த்திகேயன் மீண்டும் கல்லூரிக்கு செல்கிறார் இயக்குனர் சிபி சக்க்ரவர்த்தி இயக்கத்தில் என ட்வீட் செய்துள்ளார்.
இயக்குனர் அட்லீயின் இணை இயக்குனராக பணியாற்றிய சிபி சக்கரவர்த்தி டான் படத்தில் முதன் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார்.
படத்திற்க்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் ஒளிப்பதிவாளராக கே. எம். பாஸ்கரன் எடிட்டராக நாகூரன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்..