Cinema NewsKollywood

FIR ஓடிடி ரிலீஸ் குறித்து விஷ்ணு விஷால்

Last Updated on October 30, 2021 by Dinesh

FIR ஓடிடி ரிலீஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு தற்போது நடிகர் விஷ்ணு விஷால் பதிலளித்துள்ளார்…

FIR ஓடிடி ரிலீஸ் குறித்து விஷ்ணு விஷால்
Vishnu Vishal

சிலுக்குவார்பட்டி சிங்கம், காடன் உள்ளிட்ட திரைபடங்களுக்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வரும் திரைப்படம் எஃப்‌ஐ‌ஆர். இப்படத்தினை அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கி வருகிறார்.

எஃப்‌ஐ‌ஆர் திரைபடத்தின் இறுதி கட்ட படபிடிப்புகள் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்து. தற்போது எஃப்‌ஐ‌ஆர் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது..

இதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி எஃப்‌ஐ‌ஆர் படத்தின் விழியிலே என்கிற முதல் பாடல் இசையமைப்பாளர் அஸ்வத் இசையில் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் எஃப்‌ஐ‌ஆர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகுமா? அல்லது திரையரங்கில் வெளியாக உள்ளதா என்ற தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகமல் இருந்தது.

இருப்பினும் எஃப்‌ஐ‌ஆர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதனை தற்போது நடிகர் விஷ்ணு விஷால் மறுத்துள்ளார்.

FIR ஓடிடி ரிலீஸ் குறித்து விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து, நடித்து வரும் எஃப்‌ஐ‌ஆர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து மறுப்பு தெரிவித்து தற்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிலளித்துள்ளார்.

இது குறித்து அவர் குறிபிட்டுள்ளதாவது எஃப்‌ஐ‌ஆர் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்பது தவறான செய்தி அதிகாரபூர்வமான அறிவிப்பிக்கு காத்திருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன் மேலும், நான் எப்போதும் சொல்வது போல் ஒரு தயாரிப்பாளராகவும், நடிகனாகவும் என்னால் முடிந்த அளவு எஃப்‌ஐ‌ஆர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட முயற்சிப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் எஃப்‌ஐ‌ஆர் திரைபடத்தில் விஷ்ணு விஷால், கௌதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோர் நடித்து உள்ளனர்.

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய அமலா பால்

எஃப்‌ஐ‌ஆர் திரைபடத்திற்க்கு இசையமைப்பாளர் அஸ்வத் இசையமைத்துள்ளார். படத்தின் எடிட்டராக பிரசன்னா ஜி‌கே மற்றும் ஒளிப்பதிவாளராக அருள் வின்சென்ட் ஆகியோர் பணியாற்றி உள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !