Cinema NewsKollywood

பிளாஸ்டிக் சர்ஜரி செய்த இளம் நடிகை மரணம்

Last Updated on May 17, 2022 by Dinesh

பிளாஸ்டிக் சர்ஜரி செய்த இளம் நடிகை மரணமடைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

பிளாஸ்டிக் சர்ஜரி செய்த இளம் நடிகை மரணம்
chetnana raj

கன்னட சின்னதிரையில் கீதா, டோரிசானி உள்ளிட்ட தொடர்களின் மூலம் கன்னடத்தில் சின்னதிரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சேத்தனா ராஜ் (chethana raj ) 21 வயதே ஆன சேத்தனா ராஜின் மரணம் கன்னட சீரியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியுள்ளது..

21 வயதான கன்னட தொலைகாட்சி நடிகை சேத்தனா ராஜ் தனது உடல் கொழுப்பை குறைக்க ஃபாட் ப்ரீ எனப்படும் பிளாஸ்டிக் சிகிச்சை செய்து கொள்வதற்காக கடந்த மே 16 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்..

தன்னுடைய அறுவை சிகிச்சை தொடர்பாக பெற்றோர்களிடம் தெரிவிக்காமல் தன் நண்பர்களின் உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

இதை காலை நடிகை சேத்தனா ராஜீவுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்யபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலையில் தான் அறுவை சிகிச்சை நடைபெற்று முடிவடைந்த வேலையில் திடீரென சேத்தனா ராஜீவின் நுரையீரலில் தண்ணீர் தேங்கியுள்ளது இதன் காரணமாக அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது..

இதனையடுத்து, அங்கு இருந்த மருத்துவர்கள் நடிகை சேத்தனா ராஜிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இந்த தகவலை கேட்டு மருத்துவமனைக்கு விரைந்த சேத்தனா ராஜின் பெற்றோர்கள் தங்கள் மகளின் மரணத்திற்கு மருத்துவர்களும், மருத்துவமனை நிர்வாகம் தான் காரணம் என குற்றம் சாட்டினார்கள்..

சேத்தனா ராஜின் மரணம் தொடர்பாக மருத்துவமனை அருகிலுள்ள காவல் துறையிடம் புகாரையும் அளித்துள்ளனர் நடிகையின் பெற்றோர்கள்..

உடல் எடை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளம் நடிகை திடீரென மரணமடைந்திருப்பது கன்னட சின்னதிரை வட்டாரத்தில் மட்டுமல்ல அவரது ரசிகர்களையும் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது..

நடிகை சேத்தனா ராஜிவிற்க்கு அவரது ரசிகர்கள் தங்கள இரங்கல்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !