Cinema NewsKollywood

மல்லிப்பூ பாடல் குறித்து கவிஞர் தாமரை சொன்ன ருசிகர தகவல்

Last Updated on September 23, 2022 by Dinesh

சிம்பு நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படத்தில் இடம் பெற்ற மல்லிப்பூ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது..

மல்லிப்பூ பாடல் குறித்து கவிஞர் தாமரை சொன்ன ருசிகர தகவல்
malli poo song

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிலம்பரசன் நடித்திருக்கும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

இத்திரைபடம் கடந்த செப்டெம்பர் 15 ஆம் தேதி திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது..

Vendhu Thanindhathu Kaadu படத்தில் சிலம்பரசன், சித்தி இடானி, ராதிகா சரத்குமார், அப்புக்குட்டி, சித்திக், நீரஜ் மாதவ் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்திற்க்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைதிருந்தார் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனம் படத்தினை தயாரித்து இருந்தது..

வெந்து தணிந்தது காடு படத்தில் கவிஞர் தாமரை எழுதிய மல்லிப்பூ பாடல் யுட்யூப் டிரெண்டிங்கில் தொடர்ந்து முதல் இடம் பிடித்து வருகிறது.. மல்லிப்பூ பாடல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்பாடலை எழுதிய தாமரை மல்லிப்பூ பாடல் குறித்து சில ருசிகர தகவல்களை தற்போது பகிர்ந்துள்ளார் அவைகள் பின்வருமாறு..

வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெறும் ‘மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே’ பாடல் பெரும்பாலானோரை கவர்ந்திருக்கிறது என அறிகிறேன் மகிழ்ச்சி..

மல்லிப்பூ பாடல் குறித்து கவிஞர் தாமரை சொன்ன ருசிகர தகவல்
poet thamarai

இந்த படத்திற்க்காக நான் எழுதிய பாடல் இது. போன ஆண்டே எழுதி பதிவு செய்து படபிடிப்பு நடத்திருந்தாலும் சென்ற மாதம் தான் பாடகி மதுஸ்ரீயின் குரல் பதிவு நடந்தது.

இந்த பாடலை படமாக்கும் போதே படபிடிப்பு தளத்திலிருந்து அழைத்து சொன்னார்கள் எல்லோருக்கும் பாடல் பிடித்திருக்கிறது, இது ஆட்டத்துக்கான பாடல் என்று !

பாடல் துள்ளிசையாக இருந்தாலும் வேலைக்காக வீட்டை / நாட்டை / உறவுகளை விட்டு வெகுதூரம் செல்லும் மனிதர்களின் பிரிவாற்றாமையே கரு ! கணவன் – மனைவி பாடலாக இருந்தாலும்,

துளி விரசம் எட்டி பார்க்காமல் மேலோட்டமாக தொட்டு செல்லும்படியாகவே அமைத்து கொண்டேன்.

அதே சமயம், ஆழமான வரிகள் என்பதை ஊன்றி கவனித்தால் உணரலாம். அந்த வகையில் கௌதம், ரஹ்மான் எனக்கு கொடுத்த சுதந்திரம் பெரிது !

படக்காட்சிக்காக மட்டுமல்லாமல், தொலைதூர உறவுகளின் உணர்வாக அமைத்து கொண்டதால் பலருக்கும் இந்த பாடல் பிடித்திருக்கிறது. என்ன இருந்தாலும் பிரிவு என்பது ஒரு வலுவான உணர்வு அல்லவா ?

இந்த வகை பாடல் இதற்க்கு முன் அவ்வளவாக வந்ததில்லை என்பதும் காரணம். இது முழுக்க முழுக்க மெட்டுக்கு எழுதபட்ட பாடல் !

விரைவாக எழுதிவிட்டேன். நாட்டுபுற பாடல்கள் நான் எழுத மாட்டேன் என பலரும் நினைத்திருப்பதால் பாடல் பதிவின் போது புன்னகைத்து கொண்டேன்.

என தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தி உள்ளார் கவிஞர் தாமரை.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !