ஹைத்ராபாத்தில் இயக்குனர் மணி ரத்னம் மற்றும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் உட்பட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் குவிந்ததன் காரணம் இது தான் !
பிரபல எழுத்தாளரான கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்கி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன்..
இதில் பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan:l ) பாகம் ஒன்று திரைப்படம் கடந்த ஆண்டு உலகம் முழுவதும் உள்ள திரை அரங்குகளில் வெளியாகி சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது..
இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் ( Ponniyin Selvan: 2) பாகம் இரண்டு மிக பெரும் பொருட்செல்வில் தயாராகி கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும் தயாராகும் இப்படத்தினை இயக்குனர் மணிரத்னம் இயக்க லைக்கா நிறுவனம் படத்தினை தயாரிக்கிறது..
மேலும் படத்தில் சீயான் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, சரத் குமார், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், சோபிதா துலிபாலா, விக்ரம் பிரபு, பிரபு உள்ளிட்ட பல ஏராலாமான நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடிக்கின்றனர்..
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் படத்தின் கதையை உலக நாயகன் நடிகர் கமல் ஹாசன் வாய்ஸ் ஓவரில் தொகுத்து எடுக்கபட்டிருந்தது.
தற்போது அதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் உலகநாயகன் கமல் ஹாசன் படத்தின் கதையை தொகுத்து வழங்குகிறார்..
இதற்கான அறிமுக வீடியோவை யுட்யூப் தளத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா சமீபத்தில் வெளியீட்டு இருந்தது குறிபிடத்தக்கது..
வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரை அரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இதன் காரணமாக பொன்னியின் செல்வன் படத்தின் படக்குழு சார்ந்த நடிகர், நடிகைகள் மும்பை, கேரளா,பெங்களூரு
உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று படத்தின் ப்ரமோஷன் பணிகளுக்காக அங்குள்ள ரசிகர்களை நேரில் சந்தித்து வருகின்றனர்..
அந்த வகையில் தற்போது பொன்னியின் செல்வன் படக்குழு ஹைட்ராபாத்தில் இன்று படத்தின் ப்ரமோஷன் பணிகளுக்காக ஹைத்ராபாத் ரசிகர்களை நேரில் சந்தித்து உரையாட உள்ளனர்..
இதற்கான புகைபடங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது..