தளபதி விஜய்க்கு வில்லியாக நடிக்கிறாரா சமந்தா ?

தளபதி விஜய்க்கு வில்லியாக நடிகை சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை கிளப்பியுள்ளது..

தளபதி விஜய்க்கு வில்லியாக நடிக்கிறாரா சமந்தா ?
vijay & samantha

விஜய் நடிக்கும் Thalapathy 67 படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் சமந்தா நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி வந்த நிலையில்,

தற்போது மீண்டும் ஒரு புதிய தகவலாய் தளபதி 67 படத்தில் விஜய்க்கு சமந்தா வில்லியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி நடிகர் விஜய் மற்றும் சமந்தா ரசிகர்களை மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது..

விஜய் மற்றும் சமந்தா ஜோடி இது வரை தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் திரைபடங்களான தெறி, மெர்சல், கத்தி ஆகிய மூன்று படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர்..

இந்த மூன்று படங்களிலும் விஜய்க்கு ஜோடியாக தனக்கே உரித்தான cute & sweet நடிப்பில் அசத்தி இருப்பார் நடிகை சமந்தா..

தற்போது இந்த படங்களின் வரிசையில் நான்காவது முறையாக விஜய்யுடன் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார்..

ஆனால், தளபதி 67 படத்தில் சமந்தா cute & sweet நாயகியாக இல்லை, விஜய்க்கு வில்லியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இதற்க்கு முன் சமந்தா கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்த பத்து என்றதுக்குள்ள படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து இருப்பார்..

அதில், ஒரு வேடத்தில் க்யூட் நாயகியாகவும் மற்றொரு வேடத்தில் மிரட்டும் வில்லியாகவும் நடித்து இருப்பார்.

சமந்தா வில்லியாக நடித்த முதல் திரைப்படம் பத்து என்றதுக்குள்ள என்ற படத்தில் தான்..

அப்போது, பத்து என்றதுக்குள்ள படத்தில் நடிகர் விக்ரமிற்க்கு வில்லியாக நடித்த சமந்தா தற்போது விஜய்க்கு வில்லியாக நடிக்க இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களிடையே ஆச்சர்யத்தையும், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது..

தற்போது, இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் Thalapathy 66 படமான வாரிசு திரைபடத்தின் படபிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் (2023) அன்று திரைக்கு வர இருப்பதாக ஏற்கனவே படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டனர்.

varisu படத்தின் படபிடிப்பு பணிகள் முடிவடைந்த பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் Thalapathy 67 படத்தின் படபிடிப்பு பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கபடுகிறது.

Exit mobile version