samantha : க்யூட்டா புத்தாண்டு வாழ்த்து சொன்ன சமந்தா !

நடிகை சமந்தா தனது ரசிகர்களுக்கு க்யூட்டா புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார்..

Samantha akkineni
samantha

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா கடந்த 2010 இல் சிம்பு நடிப்பில் வெளிவந்த விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் சமந்தா..

இதே 2010 ஆம் ஆண்டில் தெலுங்கில் ஏ மாய சேசாவே என்ற படத்தில் நடித்தற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதினை பெற்றார்..

பின்னர், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கிய சமந்தா தென் இந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக தற்போது வரை வலம் வருகிறார்..

samantha

தளபதி விஜய்யுடன் இணைந்து சமந்தா நடித்த தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்கள் இவருக்கு புகழை சேர்த்தது மட்டுமின்றி வெற்றி படங்களாகவும் அமைந்தது..

சமீபத்தில் தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார்..

இந்த படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்த சமந்தாவின் நடிப்பு ரசிகர்கள் பலரையும் ஈர்க்க செய்தது. இந்த படத்தினை தொடர்ந்து நடிகை சமந்தா நடிப்பில் யசோதா படம் கடந்த மாதம் நவம்பர் 11 ஆம் தேதி வெளியானது..

இப்படத்தில் வாடகை தாய் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். மேலும் படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், சம்பத் ராஜ், திவ்யா ஸ்ரீபடா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தினை ஸ்ரீதேவி மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் ஹரி-ஹரீஷ் இயக்கி இருந்தார்..

samantha

தற்போது, நடிகை சமந்தா தனது இன்ஸ்டாக்ரம் பக்கத்தில் தன் ரசிகர்களுக்கு க்யூட்டான புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அந்த பதிவில் முன்னோக்கி செயல்பட நம்மால் முடிந்ததை கட்டுபடுத்துங்கள் ! வரும் 2023 ஆம் ஆண்டிற்க்கு கடவுள் அருள் புரிவனாக என தனது பதிவில் சமந்தா தெரிவித்துள்ளார்.

Exit mobile version