சமந்தா விஜய்தேவரகொண்டா படபிடிப்பு தளத்தில் விபத்தா
Last Updated on May 24, 2022 by Dinesh
சமந்தா, விஜய் தேவரக்கொண்டா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் குஷி இத்திரைபடம் வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது..

இந்நிலையில் குஷி பட தளத்தில் நடிகை சமந்தா மற்றும் நடிகர் விஜய் தேவரக்கொண்டாவுக்கு படபிடிப்பின் போது காயம் ஏற்பட்டுள்ளதக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
இயக்குனர் சிவா நிர்வாண எழுதி இயக்கும் குஷி ( Kushi ) திரைபடத்தில் விஜய் தேவரக்கொண்டா, சமந்தா, ஜெயராம், முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்..
மைதிரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்க்கு இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வாகாப் இசையமைக்கிறார். எடிட்டராக பிரவீன் புடி மற்றும் ஒளிப்பதிவாளராக முரளி ஜி ஆகியோர் இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்..
குஷி திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் தயாராகி வருகின்றது. இதையொட்டி படத்தின் குஷி படத்தின் முதற்கட்ட படபிடிப்பு காஷ்மீர் பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகின்றன..
படத்தின் முதற்கட்ட படபிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கும் நிலையில் படபிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற குஷி படத்தின் படபிடிப்பின் போது சமந்தா மற்றும் விஜய் தேவரக்கொண்டா ஆகியோர் ஜீப்பில் செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தது..
இதில் எதிர்பாராவிதமாக கட்டுப்பாட்டை இழந்த அந்த ஜீப் அருகில் இருந்த நதியில் சீறி பாய்த்துள்ளது. இந்த விபத்தில் நடிகர் விஜய் தேவரக்கொண்டா மற்றும் சமந்தாவுக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன..
எதிர்பாராவிதமாக நடைபெற்ற இந்த விபத்தினால் பதறிபோன குஷி படக்குழுவினர் சமந்தா, விஜய் தேவரக்கொண்டா ஆகியோரை மீட்டுஉள்ளனர். தற்போது அவர்களுக்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்ட்டு வருவதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் குஷி படத்தின் படபிடிப்புகள் தொடங்கும் எனவும் படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.