ஐ‌ந்து தேசிய விருதுகளை குவித்த சூர்யாவின் Soorarai Pottru

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான Soorarai Pottru திரைப்படம் ஐந்து தேசிய விருதுகளை பெற்று மிரட்டியுள்ளது..

ஐ‌ந்து தேசிய விருதுகளை குவித்த சூர்யாவின் Soorarai Pottru
suriya

துரோகி, இறுதி சுற்று உள்ளிட்ட படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சூரரை போற்று..

இத்திரைபடத்தில் நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி, பூ ராமு, ஊர்வசி, கருணாஸ், பரேஷ் ரவாள் உள்ளிட்ட பலர் நடித்த இருந்தனர். இந்த படத்தினை நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் sikhya entertainment நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தது..

படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். மேலும் படத்தில் ஒளிப்பதிவாளராக நிகெத் பொம்மிரெட்டி மற்றும் எடிட்டராக சதீஷ் சூர்யா ஆகியோர் பணியாற்றியுள்ளனர்..

சூரரை போற்று திரைப்படம் வெளியான நேரம் கொரோனா காலம் என்பதால் இத்திரைபடம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடபட்டது.

நடிகர் சூர்யா நடித்த திரைப்படங்களில் திரைக்கு வராமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான முதல் திரைப்படம் இதுவே ஆகும்..

ஆகையால், இத்திரைபடம் ஓடிடி தளத்தில் வெளியாகும் முன் நடிகர் சூர்யா தன்னுடைய ரசிகர்களுக்கு சூரரை போற்று திரைப்படம் திரைக்கு கொண்டு வர முடியாமல்,

ஏன் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடபடுகிறது என்பதிற்கான விளக்கத்தையும், தன் கோரிக்கையும் அறிக்கையாகவும் வீடியோ பதிவாகவும் வெளியிட்டு இருந்தார்..

இதனை தொடர்ந்து, ஓடிடி தளத்தில் வெளியான சூரரை போற்று திரைப்படம் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. அது மட்டுமின்றி இத்திரைபடம் விருதுகளையும் குவித்து வந்தது..

அந்த வகையில் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரை போற்று திரைப்படம் ஐந்து தேசிய விருதுகளை அள்ளி குவித்துள்ளது..

தேசிய விருதுகள் பட்டியலில் சூரரை போற்று படத்திற்க்கு கிடைத்த விருதுகள் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த பின்னணி இசை, சிறந்த நடிகை உள்ளிட்ட 5 விருதுகளை பெற்றுள்ளது.

Exit mobile version