பிரபல சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம்

தமிழ் தொலைகாட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகைக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..

பிரபல சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம்
tejaswini gowda

பிரபல தனியார் தொலைகாட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர்களில் பிரபலாமான தொடரான sundari neeyum sundaran naanum என்ற தொடரின் மூலம் தமிழ் தொலைக்காட்சிகளில் தோன்றினார் நடிகை Tejaswini Gowda..

கர்நாடகா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் நடிகை தேஜஸ்வினி கௌடா. தனது தாய் மொழியான கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்..

தற்போது ஜீ தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் vidhya no.1 தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் தேஜஸ்வினி கௌடா சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார்..

இந்நிலையில், சமீபத்தில் தேஜஸ்வினி கௌடாவிற்க்கும் தெலுங்கு டி‌வி நடிகர் அமர்தீப் சௌதரிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது..

தற்போது அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து தன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் நடிகை தேஜஸ்வினி கௌடா..

இந்த புகைப்படங்களை பகிர்ந்தது மட்டுமின்றி நடிகர் அமர்தீப் சௌதரியை டேக் செய்து தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்..

இதை தொடர்ந்து தேஜஸ்வினி கௌடா மற்றும் அமர்தீப் சௌதரி ஜோடிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதால் ரசிகர்கள் மற்றும் சின்ன திரை பிரபலங்கள் ஆகியோர் இந்த புதுமண ஜோடிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

tejaswini gowda & amardeep chowdary
Exit mobile version