தெலுங்கானா முதல்வரை சந்தித்த தளபதி விஜய்
Last Updated on May 19, 2022 by Dinesh
தெலுங்கானா முதல்வரை சந்தித்த தளபதி விஜய்யின் புகைபடங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது..

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைபடத்தின் வெற்றிக்கு பின் விஜய் நடிக்கும் 66-வது ( Thalapthy 66 ) படத்தின் படபிடிப்பு பூஜை சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் நடைபெற்றது..
பெயரிடபடாத இப்படத்தின் படபிடிப்பு பணிகள் முதலில் சென்னையில் சில நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதை தொடர்ந்து Thalapathy 66 படத்தின் முதற்கட்ட படபிடிப்பு ஹைத்ராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது..
Thalapthy66 படத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தன்னா, பிரகாஷ் ராஜ், சரத் குமார், யோகிபாபு, சங்கீதா, ஷ்யாம், ஜெயசுதா, பிக்பாஸ் புகழ் சம்யுக்தா உள்ளிட்ட ஏராளமானோர் இப்படத்தில் நடிக்கின்றனர்..
தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் தளபதி66 படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். மேலும் இந்த படத்திற்க்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்..
ஹைத்ராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றும் தளபதி66 படத்தின் படபிடிப்பு பணிகளுக்கு இடையில் நடிகர் விஜய் தெலுங்கானா முதல்வர் சந்தரசேகர ராவை சந்தித்துள்ளார்..

இந்த சந்திப்பானது தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவின் இருப்பிடமான பிரகதி பகவனில் நடைபெற்றுள்ளது. மேலும் இச்சந்திப்பின் போது நடிகர் விஜயுடன் தளபதி66 படத்தின் இயக்குனர் வம்சியும் உடன் சந்தித்துள்ளார்..
நடிகர் விஜய் மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்வின் இந்த திடீர் சந்திப்பு மற்றும் அதன் புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாக பரவியது..
இதை தொடர்ந்து தெலுங்கானா முதல்வரை மரியாதை நிமத்தமாக நடிகர் விஜய் சந்தித்தாக கூறப்படுகிறது..
நடிகர் விஜய்யை சால்வை போற்றி வரவேற்ற தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நினைவு பரிசு ஒன்றையும் உடன் வழங்கினார்.