தளபதி 66 படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் & டைட்டில் வெளியானது

தளபதி 66 படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் & டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது…

தளபதி 66 படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் & டைட்டில் வெளியானது
Thalapathy vijay

தெலுங்கு பட இயக்குனர் வம்சி படபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் தளபதி விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்..

மேலும், இப்படத்தில் நடிகர்கள் யோகி பாபு, ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ் மற்றும் நடிகைகள் சங்கீதா க்ரிஷ், பிக்பாஸ் சம்யுக்தா சண்முகநாதன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்..

தளபதி 66 படத்தின் பூஜை கடந்த (2022) ஏப்ரல் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.. படத்தின் படபிடிப்புகள் முதல் இரண்டு வாரங்கள் சென்னையில் நடைபெற்று முடிந்த நிலையில் மீதமுள்ள படபிடிப்புகளை ஹைத்ரபாத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுருந்தனர்..

அதன் படி, தளபதி 66 படத்தின் முக்கிய காட்சிகள் ஹைத்ரபாத்தில் படமாக்கபட்டுள்ளது இதனை படக்குழு தளபதி 66 படத்தின் ரிலீஸ் தேதியை கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்த போது இவற்றினை தெரிவித்து இருந்தது..

இதனை தொடர்ந்து தளபதி 66 படத்தின் புதிய அப்டேட்களை எதிர்பார்த்து இருந்த விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாய் Thalapathy 66 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளது படக்குழு..

தளபதி விஜய் நடிக்கும் 66-வது படத்திற்க்கு வாரிசு ( Varisu ) என பெயரிடப்பட்டு முதல் பார்வை படத்தினையும் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லூக் போஸ்டரில் நடிகர் விஜய் கோட் சூட்டுடன் தொடையில் கை ஊன்றியபடி கெத்தாக அமர்ந்து இருப்பது போன்று வெளியாகியுள்ளது..

மேலும், போஸ்டரின் பின்புறத்தில் ஐ‌டி கம்பெனி வளாகத்தில் தளபதி விஜய் அமர்ந்து இருப்பது போல் போஸ்டர் காட்சியளிக்கிறது.விஜய் நடிக்கும் varisu படத்தின் சப்டைட்டிலில் The Boss Return தலைப்பும் போஸ்டரில் காண்பிக்கபடுகிறது..

நாளை தளபதி விஜய் தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் இன்று படக்குழுவினரால் அதிகாரபூர்வமாக வெளியிடபட்டுள்ளது.

Exit mobile version