Last Updated on December 21, 2022 by Dinesh
தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அதிகாரபூர்வமாக வெளியானது..
![varisu audio launch release date](http://i0.wp.com/www.natshathiram.com/wp-content/uploads/2022/12/varisu-audio-launch-release-date.jpg?resize=780%2C446&ssl=1)
தெலுங்கில் பிரபல இயக்குனரான வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு வாரிசு படத்தினை தயாரிக்கிறார்..
வாரிசு படத்தில் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தன்னா, குஷ்பு, பிரபு, சரத் குமார், ஷ்யாம், பிரகாஷ் ராஜ்,
ஆனந்த் ராஜ் என தமிழில் பிரபலமான நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடிக்கின்றனர்..
இசையமைப்பாளர் தமன் இசையில் வாரிசு படத்தில் இருந்து இது வரை மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. யுட்யூப் தளத்தில் வாரிசு பாடல் ரஞ்சிதமே 102 மில்லியன் ( 12 கோடி ) பாரவையாளர்களையும்,
வாரிசு படத்தின் இரண்டாவது பாடல் தீ தளபதி பாடல் 2.6 மில்லியன் (2.6 கோடி ) பார்வையாளர்களையும், வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் soul of varisu வாரிசு அம்மா பாடல் 5.2. மில்லியன் பாரவையாளர்களை கடந்து அசத்தி வருகிறது..
வாரிசு பாடல்கள் இணையத்தில் சக்க போடு போட்டு வரும் நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகபடுத்தி உள்ளது..
வரும் 2023 பொங்கல் தினத்தை முன்னிட்டு வாரிசு படம் ஜனவரி 12 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது..
வாரிசு பட இசை வெளியீட்டு விழாவிற்க்கு பிரமாண்டமாக தயாராகும் மேடையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மேடையில் The Boss Return என்ற டைட்டிலுடன் வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.