Thalapathy66 ரிலீஸ் தேதி அறிவிப்பு ரசிகர்கள் உற்சாகம்

Thalapathy66 ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளிவந்ததையொட்டி தளபதி விஜய்யின் ரசிகர்கள் இணையத்தில் உற்சாகமுடன் கொண்டாடி வருகின்றனர்..

Thalapathy66 ரிலீஸ் தேதி அறிவிப்பு ரசிகர்கள் உற்சாகம்
Vijay

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைபடத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் தளபதி66 படத்தில் நடித்து வருகிறார்..

பெயர் வைக்கபடாத இப்படத்திற்க்கு தற்காலிகமாக விஜய் நடிக்கும் 66 படத்தினை தளபதி66 என்ற தலைப்புடன் சென்னையில் பூஜையுடன் முதற்கட்ட படபிடிப்பு தொடங்கியது..

தளபதி 66 படத்தின் படபிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கி இருந்தாலும் இப்படத்தின் முதற்கட்ட படபிடிப்புகள் பெரும்பாலான காட்சிகள் ஹைத்ராபாத்தில் நடைபெற்றுள்ளது..

இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றாலும் முதற்கட்ட படபிடிப்பை ஹைத்ராபாத்தில் நடத்த திட்டமிட்டுருந்தனர் படக்குழுவினர். இதனால் தமிழகத்தின் பெப்சி ( FEFSI ) உறுப்பினர்கள் பாதிக்கபடுவார்கள் என கருதி தளபதி விஜய் முதலில் இந்த படத்தின் படபிடிப்புகள் சென்னையில் நடைபெற வேண்டும்

என கூறியதன் அடிபடையில் சென்னையில் தளபதி 66 படத்திற்கு பிரத்யேக செட் அமைக்கப்பட்டு முதல் இரண்டு வாரங்கள் படத்தின் படபிடிப்பு பணிகள் சென்னையில் நடைபெற்றது..

இருப்பினும், கால அட்டவணை படி ஹைத்ராபாத்தில் (2022) மே மாதத்தின் துவத்தில் தொடங்கிய தளபதி 66 படத்தின் படபிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைத்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்..

தற்போது தளபதி66 தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் முதல் கட்ட படபிடிப்பில் ஹைத்ராபாத்தில் முக்கியமான காட்சிகளை எடுத்துள்ளாதகவும் விரைவில் எங்களின் அடுத்த கட்ட படபிடிப்பு தொடங்குவதில் ஆர்வமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது..

மேலும். இதனுடன் விஜய் ரசிகர்களை உற்சாகபடுத்தும் வகையில் படத்தின் முக்கிய தகவலை பகிர்ந்துள்ள படக்குழுவினர்.

வரும் 2023 பொங்களுக்கு Thalapathy 66 திரைப்படம் திரைக்கு வருகிறது என படக்குழு அறிவித்துள்ளது.. இதனை வரவேற்க்கும் வகையில் விஜய்யின் ரசிகர்கள் இணையத்தில் Thalapthy66 ஹஸ்டாக் மூலம் கொண்டாடி வருகின்றனர்..

தளபதி விஜய், ராஷ்மிகா, சரத் குமார், ஷ்யாம், யோகி பாபு, பிரபு, சங்கீதா என பெரிய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடிக்கின்றனர்.. இசையமைப்பாளர் தமன் இசையமைக்கும் இப்படத்தினை இயக்குனர் வம்சி இயக்குகிறார்..

Exit mobile version