ஒரு கோடி பார்வையாளர்களை கடந்த the legend tamil movie trailer
Last Updated on May 31, 2022 by Dinesh
லெஜெண்ட் சரவணன் நடிக்கும் the legend திரைபடத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது..

இந்நிகழ்ச்சியில் பிரபல நடிகைகள் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியிடபட்டன..
நேற்று சென்னையில் நடைபெற்ற தி லெஜெண்ட் திரைபடத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் நடிகர் பிரபு மற்றும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மதுரை அன்பு ஆகியோர் கலந்து கொண்டு படத்தின் ட்ரைலரை வெளியிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகைகளான தமன்னா, பூஜா ஹெக்டே, டிம்பிள் ஹயாத்தி, லக்ஷ்மி ராய், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வஷி ரவுதல்லா, யாஷிகாஆனந்த், ஸ்ரீ லீலா, ஹன்சிகா மோத்வானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்..
இயக்குனர் ஜே.டி. ஜெர்ரி இயக்கும் the legend படத்தில் லெஜெண்ட் சரவணன், ஊர்வசி ரவுதல்லா, பிரபு, நாசர், யோகி பாபு ஜீதிகா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தினை லெஜெண்ட் சரவணன் தயாரிக்கிறார்..
மேலும், இப்படத்தின் கூடுதல் பலமாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தி லெஜெண்ட் படத்திற்க்கு இசையமிக்கிறார். படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களை கவியரசு வைரமுத்து, மதன் கார்க்கி, கபிலன், பா.விஜய், சினேகன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்..
the legend திரைபடத்தின் ட்ரைலரை இணையத்தில் இதுவரையில் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து வருகிறது. யுட்யூப் வலைதளத்தில் 11 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சுமார் 4 லட்சம் லைக்குகளை நெருங்கி வருகிறது தி லெஜெண்ட் படத்தின் ட்ரைலர்..
இது குறித்து படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்து இருப்பது ஒரு நாளில் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து யுட்யூப் ட்ரெண்ட்ங்கில் முதல் இடத்தில் உள்ளது the legend movie உங்கள் அனைவருக்கும் நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.
keeze the legend tamil movie trailer கொடுக்கபட்டுள்ளது அனைவரும் கண்டு ரசியுங்கள்..