விஷால் நடிக்கும் படத்தின் டைட்டில் இன்று இணையத்தில் அதிகாரபூர்வமாக வெளியாகி வைரலாகி வருகிறது..

நடிகர் விஷால் நடிப்பில் புதுமுக இயக்குனர் து.பா. சரவணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் வீரமே வாகை சூடும்.
இத்திரைபடத்தில் நடிகர் விஷால், டிம்பிள் ஹயாத்தி, யோகி பாபு, பாபு ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
.இப்படத்தின் டீசர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தின் டீசரை பார்க்கையில் வீரமே வாகை சூடும் திரைப்படம் ஒரு தரமான ஆக்ஷன் படமாக ரசிகர்களுக்கு விருந்தளிக்க திரைக்கு வர இருக்கிறது.
வீரமே வாகை சூடும் திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது.
இதனிடையே நடிகர் விஷால் தனது 33 வது படத்தின் புதிய அறிவிப்பு ஒன்றை கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டு இருந்தார்..
அந்த அறிவிப்பில், .விஷால் 33 வது திரைப்படம் தயாரிப்பாளர் வினோத் குமார் தயாரிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் எழுதி இயக்கும்,
புதிய திரைப்படம் ஒரு பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியன் திரைபடமாக உருவாக உள்ளது என தெரிவித்து இருந்தார்.
இதை தொடர்ந்து நேற்று (2021 டிசம்பர் 31 ஆம் தேதி ) நடிகர் விஷாலின் 33 வது படம் குறித்து ஒரு சிறிய போஸ்டர் உடன் அறிவிப்பு ஒன்றைய வெளியிட்டார்.
விஷால் நடிக்கும் படத்தின் டைட்டில் இதுதான்
விஷால் 33 வது படத்தின் முக்கிய அப்டேட் நாளை (01.01.2022 ) வெளியிடபோவதாக அறிவிப்பில் குறிப்பிட்டு இருந்தார்.
அதன் படி, இன்று 2022 புத்தாண்டை கொண்டாடும் விதமாக தான் நடிக்கும் 33 வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டு தன் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.
விஷால் நடிக்கும் 33 வது படத்திற்க்கு ‘மார்க் ஆண்டனி’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் ஒரு பான் இந்தியன் ஆக்ஷன் திரைபடமாக உருவாக உள்ளது. மேலும் இப்படத்தில் நடிகர் விஷாலுடன் எஸ். ஜே. சூர்யா நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் படபிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.